அது என் இஷ்டம்.. அதுவரை மாறாது.. ரஹானே வைத்த கோரிக்கையை நிரகாரித்த கொல்கத்தா க்யூரேட்டர்

Kolkatta Curator
- Advertisement -

விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ள ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு கௌகாத்தியில் 6வது லீக் போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அவ்விரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியை சந்தித்தன.

எனவே 2வது போட்டியில் வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாட உள்ளன. முன்னதாக இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணி தங்களது சொந்த மண்ணில் பெங்களூருவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ரஹானே கோரிக்கை:

அந்தப் போட்டியில் கொல்கத்தா நிர்ணயித்த 175 ரன்களை 16.2 ஓவரில் தொட்டு பெங்களூரு வெல்லும் அளவுக்கு பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றி எந்தளவுக்கு நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட அவரால் கூட அந்தப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

அதே சமயம் பெங்களூரு 95 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த பின் வருண் சக்கரவர்த்தி தான் முதல் விக்கெட்டை எடுத்தார். அதன் காரணமாக அடுத்து நடைபெறும் போட்டிகளில் கொல்கத்தாவில் பிட்ச் கொஞ்சம் சுழலுக்கு சாதகமாக இருப்பதை விரும்புவதாக கேப்டன் அஜிங்க்ய ரஹானே கேட்டுக்கொண்டார். குறிப்பாக சுனில் நரேன், வருண் ஆகிய தங்களது அணியின் ஸ்பின்னர்களுக்கு உதவும் வகையில் பிட்ச் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- Advertisement -

நிராகரித்த க்யூரேட்டர்:

ஆனால் அந்த கோரிக்கையை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் பிட்ச் தயாரிப்பாளர் சுஜன் முகர்ஜி நிராகரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் இங்கே இருக்கும் வரை ஈடன் கார்டன்ஸ் பிட்ச் மாறாது. ஐபிஎல் விதிமுறைகளை படி அணி நிர்வாகங்கள் பிட்ச் பற்றி எதையும் சொல்வதற்கு உரிமையற்றவர்கள்”

இதையும் படிங்க: சச்சின், கவாஸ்கர் மாதிரி மும்பை பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் இப்படி ஒருத்தரா? ஸ்ரேயாஸ்க்கு ராயுடு பாராட்டு

“நான் பொறுப்பேற்றது முதல் இங்குள்ள பிட்ச்கள் இப்படித்தான் இருக்கிறது. கடந்த காலங்களில் இது அப்படியே இருந்தது. அது தற்போது மாறவில்லை. அதை வரும் காலங்களிலும் நான் மாற்றப் போவதுமில்லை. முதல் போட்டியில் அதே பிட்ச்சில் க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். சுயஸ் சர்மா பந்தை சிறப்பாக சுழற்றி ஆண்ட்ரே ரசலை போல்ட்டாக்கினார். ஆனால் கொல்கத்தா ஸ்பின்னர்கள் என்ன செய்தார்கள்?” எனக் கூறினார்.

Advertisement