பென் ஸ்டோக்ஸ் கம்பேக் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அதிரடி காட்டிய இங்கிலாந்து வாரியம் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Ben-Stokes
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுன்டரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 2019-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பென் ஸ்டோக்ஸ். அதன் பிறகும் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த அவர் பணிச்சுமை காரணமாக கடந்த ஆண்டு தான் ரெட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தப் போவதாக கூறி ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

31 வயதிலேயே அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதனை தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் தனது மிகச் சிறப்பான ஆக்ரோஷமான அணுகுமுறையை இங்கிலாந்து அணிக்குள் புகுத்தி அற்புதமாக அணியை வழிநடத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் இன்னும் இரு மாதங்களில் துவங்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி நான் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட விரும்பினால் அதற்காக நான் தயாராக இருக்கிறேன் என்றும் அதற்காக ஓய்விலிருந்து மீண்டுவர தயாராக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

அதோடு பட்லர் கேட்டுக் கொண்டால் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு திரும்புவதாகவும் பென் ஸ்டோக்ஸ் தனது கம்பேக் குறித்து கடந்து சில தினங்களுக்கு முன்னர் பேசியிருந்த வேளையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பென் ஸ்டோக்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் கம்பேக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியதும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரை இணைத்துள்ள அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வெளியான அறிவிப்பில் :

இதையும் படிங்க : உலகக்கோப்பை இந்திய அணியில் அந்த 3 இடதுகை வீரர்கள் டாப் 7-ல் இருக்க வேண்டும் – ரவி சாஸ்திரி கருத்து

ஸ்டோக்ஸ் மீண்டும் ஒருநாள் அணிக்காக விளையாட இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறோம் என கூறி அவரது கம்பேக் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து தொடரில் ஸ்டோக்ஸ் விளையாடும் பட்சத்தில் கட்டாயம் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் அவர் இடம் பிடிப்பார் என்பது உறுதி.

Advertisement