தோனியும் நானும் ஒரு தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும் சகோதரர்கள் தான் – சி.எஸ்.கே வீரர் நெகிழ்ச்சி

CSK-1
Advertisement

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி துவங்க இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்களது அணிகளில் தலா 4 வீரர்களை தக்க வைக்கலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை கடந்த மாத இறுதியில் வெளியிட்டது. அதன்படி சென்னை அணியும் தங்களது அணியில் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.

CSK-2

அதன்படி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்கவைத்தது. சிஎஸ்கே அணியில் பல முக்கிய வீரர்கள் இருந்தாலும் இவர்கள் நால்வரைத் தவிர மற்ற அனைவரும் மெகா ஏலாத்தில் விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ தனது ஐபிஎல் பயணம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

நான் சிஎஸ்கே அணிக்காக தற்போது தக்க வைக்கப்படவில்லை என்றாலும் நிச்சயம் மெகா ஏலத்தில் கலந்து கொள்வேன். கண்டிப்பாக ஏதாவது ஒரு அணி என்னை தேர்வு செய்யும். நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை என்றாலும் நிச்சயம் ஏதாவது ஒரு அணியில் விளையாடுவேன் என்று பிராவோ கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சிஎஸ்கே அணிக்காக நான் நீண்டகாலம் விளையாடி உள்ளேன்.

bravo

என்னுடைய தனிப்பட்ட கிரிக்கெட் கரியரின் வளர்ச்சிக்கு தோனி மிகவும் உதவியுள்ளார். தோனியை பற்றி அனைவருக்குமே தெரியும். என்னை பொறுத்தவரை அவர் மற்றொரு தாயின் வயிற்றில் பிறந்த ஒரு சகோதரர் அவ்வளவே. அந்த அளவிற்கு எனக்கும் அவருக்குமான நட்பு மிகவும் ஆழமானது. தோனியின் பழக்கம் என்னுடைய கேரியரில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா கண்டிப்பா ஜெயிக்க வாய்ப்பிருக்கு – காரணத்தை கூறிய ஹர்பஜன்

சிஎஸ்கே அணிக்காக நாங்கள் இணைந்து மிகப்பெரிய பங்களிப்பினை கொடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன். நிச்சயம் இனிவரும் காலங்களிலும் எங்களது நட்பு மிகவும் பலமானதாக இருக்கும் அதுமட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் என்னுடைய பங்களிப்பும் இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என பிராவோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement