தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா கண்டிப்பா ஜெயிக்க வாய்ப்பிருக்கு – காரணத்தை கூறிய ஹர்பஜன்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை அடுத்து இந்திய அணியானது இந்த வார இறுதியில் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் துவங்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி கலந்துகொண்டு விளையாடுகிறது.

IND

- Advertisement -

அதன் பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி பங்கேற்று அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இந்நிலையில் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

INDvsRSA

இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த முறை நமது அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்த அணியில் டிவில்லியர்ஸ் மற்றும் டு பிளிசிஸ் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் தொடரை வெல்ல ஒரு தடையாக இருந்தனர். ஆனால் தற்போது உள்ள தென் ஆப்பிரிக்க அணி அவ்வளவு பலமானதாக இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் நமக்கு கிடைத்த சிறப்பான பிளேயர் இவர்தான் – லட்சுமணன் ஓபன்டாக்

மேலும் தற்போதைய தென்னாப்பிரிக்க அணியில் அனுபவ வீரர்கள் மிகவும் குறைவு எனவே இம்முறை இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்ற நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை தவறவிடாமல் இந்திய அணி வெற்றி பெற்று புதிய வரலாறு படைக்கும் என தான் நம்புவதாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement