நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் நமக்கு கிடைத்த சிறப்பான பிளேயர் இவர்தான் – லட்சுமணன் ஓபன்டாக்

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. மும்பையில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் போது முதல் டெஸ்டில் விராட் கோலி ஓய்வில் இருந்ததால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டார்.

ind 1

அதனைத் தொடர்ந்து 2வது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய விராட் கோலி அணியின் கேப்டனாக செயல்பட்டு வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்ததால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இந்த தொடரில் விளையாடியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் விளையாடிய ஒரு இளம் வீரரை பாராட்டி வி.வி.எஸ் லட்சுமணன் தனது பேட்டியை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் நமக்கு கிடைத்துள்ளார். தனது முதல் டெஸ்ட் இன்னிங்சின் போதே இக்கட்டான வேளையில் களமிறங்கிய அவர் 4 விக்கெட் விழுந்து இருந்தாலும் தன்னுடைய பொறுப்பினை உணர்ந்து சிறப்பாக அந்த சூழ்நிலையை கையாண்டு முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார்.

Iyer-5

அதுமட்டுமின்றி 2வது இன்னிங்சிலும் 5 விக்கெட் விழுந்த போதிலும் மீண்டும் அரை சதம் அடித்து அசத்தினார். இப்படி இக்கட்டான வேளையில் அவரது ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. இதுபோன்ற ஒரு அறிமுக போட்டியை விளையாடுவது மிக மிக கடினம். ஆனால் அதை அவர் செய்தும் காண்பித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட் : ரோஹித் சர்மா கேப்டன் அப்போ துணைக்கேப்டன் யார் தெரியுமா ? – பி.சி.சி.ஐ நியமனம்

இனிவரும் தொடர்களில் நிச்சயம் ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் ஆர்டரில் இருக்க வேண்டிய ஒரு வீரராகவே இருக்கிறார் என்று லட்சுமணன் கூறியது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement