ஒருநாள் கிரிக்கெட் : ரோஹித் சர்மா கேப்டன் அப்போ துணைக்கேப்டன் யார் தெரியுமா ? – பி.சி.சி.ஐ நியமனம்

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று பி.சி.சி.ஐ நேற்று அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அதன்படி நேற்று வெளியான அறிவிப்பில் இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.

Rohith

- Advertisement -

மேலும் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலகவில்லை என்றும் பிசிசிஐ அவரை கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விராட் கோலியின் ரசிகர்களும் பெரிய அளவில் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கேப்டன் பதவி நீக்கத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் யார் ? என்ற கேள்வியே அதிகளவு இருந்து வருகிறது. இந்நிலையில் அதற்கு விடையாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் துணை கேப்டனாக 29 வயதாகும் கே.எல் ராகுல் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Rahul

ஏனெனில் ஏற்கனவே டி20 கிரிக்கெட் துணைக்கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கும் துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. ரோஹித்துக்கு பிறகு கேஎல் ராகுல் அணியின் கேப்டனாக நியமனமாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதால் அவரே துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 18 வீரர்கள் மட்டுமின்றி மேலும் 4 வீரர்களை தென்னாபிரிக்க தொடருக்கு – தேர்வுசெய்துள்ள பி.சி.சி.ஐ

தற்போது 29 வயதில் இருக்கும் ராகுல் இன்னும் ஆறு ஏழு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பதனால் அவரை துணை கேப்டனாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்தான அறிவிப்பும், தென்னாப்பிரிக்க தொடருக்கான ஒருநாள் அணியும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

Advertisement