இந்த மரண அடி சொல்லியிருக்குமே தோணி யாருனு..? கிண்டல் அடித்தவர்களுக்கு பதிலடிக் சென்னை வீரர் !

bravocsk
- Advertisement -

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தில் இதுவரை சரியாக விளையாடாத வீரர்கள் என கிண்டல் செய்யப்பட்டு வந்த இரண்டு முக்கிய வீரர்களும் தங்களுடைய அதிரடியான ஆட்டத்தின் தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர்.

bravo

- Advertisement -

அதிலும் கிறிஸ்கெயிலை அவுட் ஆப் பார்மில் இருந்ததால் இந்த ஐபிஎல்-இல் யாருமே ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இரண்டாம் நாள் ஏலத்தில் சேவாக் கிறிஸ்கெயிலை பஞ்சாப் அணிக்காக ஏலத்தில் எடுத்தார்.கெயிலுக்கு 38 வயதான காரணத்தினால் இனி அவரால் பழைய அதிரடியை காட்டிட முடியாதென்று அனைத்து அணிகளும் கெயிலை கழட்டிவிட்டது.

ஆனால் பஞ்சாப் அணிக்காக தான் களமிறங்கிய முதல் ஆட்டத்தில் சென்னை அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் அடித்து அசத்தினார். அதேபோல வயதானவர்களின் கூடாரம் என்று சென்னை அணியை பிற அணிகளின் ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

Bravo

அதிலும் 36 வயதை கடந்த தோனியும் இனி அவ்வளவு தான் என்று தோனியை வெறுப்பவர்கள் பலரும் கிண்டல் செய்தது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டும் கலாய்த்து தள்ளினர்.ஆனால் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் தோனி தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 79 ரன்களை குவித்தார்.தோனி 79 ரன்களை குவித்தபோதிலும் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் இழந்த பார்மை மீட்டதில் சென்னை ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ சமூகவலைத்தளத்தில்”கிறிஸ் கெய்ல் மற்றும் தோனியின் வயதையும் திறமையையும் குறித்து பலரும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் கடைசியாக நடந்த பஞ்சாப்-சென்னை போட்டியில் இருவரும் அதிரடியாக விளையாடி திறமைக்கும் விளையாட்டிற்கும் வயது தடையில்லை திறமையும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மட்டுமே முக்கியம் என்று எழுதியுள்ளார்.

Advertisement