ரிட்டயர்டு ஆயிருந்தாலும் சரி. அவர் சி.எஸ்.கே அணியில் தக்கவைக்கப்படுவார் – நிர்வாகம் சார்பில் தகவல்

CSK
- Advertisement -

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக சிஎஸ்கே அணி அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் இந்த ஆண்டு மீண்டும் பலமாக திரும்பி வருவோம் என்று கூறியபடி தோனி தலைமையிலான சென்னை அணி வலுவான அணியாக மாறி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதுமட்டுமின்றி இறுதிப் போட்டிக்கும் முதல் அணியாக சென்று இறுதியில் நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தி இருந்தது.

csk 1

- Advertisement -

இந்நிலையில் அடுத்த வருடம் நடக்க இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்கு ஏற்கனவே இருக்கும் 8 அணிகளுடன் இணைந்து புதிய இரண்டு அணிகள் விளையாட உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இருக்கும் இந்த தொடருக்கு முன்னர் அணிகளின் வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு அணியிலும் 4 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப் படவேண்டும் என்கிற காரணத்தினால் தற்போது அனைத்து அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியில் ஏற்கனவே கேப்டன் தோனி தக்க வைக்கப்படுவார் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மீதமுள்ள வீரர்களில் எந்த மூன்று வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்று கேள்வி அதிகளவு இருந்து வருகிறது.

bravo

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜாம்பவான் வீரர் டுவைன் பிராவோ தக்கவைக்க படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் நடைபெற்ற கடைசி போட்டியில் விளையாடிய பிராவோ அதோடு தனது ஓய்வு முடிவை சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அறிவித்தார். இருப்பினும் அவரது பவுலிங் மற்றும் பேட்டிங் என ஆல்ரவுண்டர் திறமை காரணமாக அவர் இன்னும் சில ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எனக்கும் சரி, அவருக்கும் சரி டெல்லி அணியில் தக்கவைக்கப்பட வாய்ப்பே இல்ல – அஷ்வின் வெளிப்படை

இந்நிலையில் பிராவோ அடுத்த ஆண்டு நிச்சயம் அணியில் இருப்பார் என்றும் இருப்பினும் அவர் விளையாடுவாரா என்று தெரியாது என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரோடு சேர்ந்து வெளிநாட்டு வீரர்களில் டூப்லெஸ்ஸிஸ் தக்கவைக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement