டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த பிராவோ. இப்படி ஓர் சாதனையா ? – ரசிகர்கள் வாழ்த்து

BRAVOCAR

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர்கள் தங்களது நாட்டிற்கு ஆடுவதை விட உலகம் முழுவதும் நடக்கும் டி20 கிரிக்கெட் லீக் தொடர்களில் ஆடுவதையே அதிகம் விரும்பி வருகிறார்கள். கிறிஸ் கெயில், டிவைன் பிராவோ, கைரன் பொல்லார்ட், சுனில் நரைன் போன்ற வீரர்கள் ஐபிஎல், பிக் பாஸ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக் என உலகம் முழுவதும் நடக்கும் பல கிரிக்கெட் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்கள்.

இதன் காரணமாக டி20 போட்டிகளில் இந்த அனைத்து வீரர்களும் பல சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் டுவைன் பிராவோ. இந்தப் போட்டி அவருக்கு 459வது போட்டியாக அமைந்தது. இவர் வீழ்த்திய 2 விக்கெட் இவருக்கு ஒரு மிகப்பெரிய சாதனையை கொண்டுவந்து சேர்த்துள்ளது.

Bravo

ஆம் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக 500 விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் டுவைன் பிராவோ. ஏற்கனவே 200, 300 மற்றும் 400 டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக இருந்தார் டிவைன் பிராவோ. இப்படி தொடர்ந்து 20 போட்டிகளில் வீரர்கள் பல சாதனைகள் படைத்து வருகிறார்கள் வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வீரர்கள்.

- Advertisement -

Bravo

முன்னதாக டி20 போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை பெற்றிருந்தார் கிறிஸ் கெயில். அதேபோல் அதிக டி20 போட்டிகளில் ஆடிய சாதனை படைத்திருந்தார் கைரன் பொல்லார்ட் என்பது குறிப்பிடத்தக்கது.