கோட்டை விட்ட சிஎஸ்கே அணிக்கு விழுந்த அடி.. கண்ணீர் மல்க விடைபெற்ற ப்ராவோவை தூக்கிய ஐபிஎல் அணி

Dwayne Bravo
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ட்வயன் ப்ராவோ அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 40 டெஸ்ட், 164 ஒருநாள், 91 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடினார். அதில் முறையே 2200, 3606, 1090 ரன்கள் அடித்த அவர் 86, 199, 78 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அதை விட ஐபிஎல் உட்பட உலகம் முழுவதிலும் நடைபெற்ற அனைத்து டி20 தொடர்களிலும் விளையாடிய ப்ராவோ மொத்தம் 575 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 6943 ரன்களையும் 631 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் தற்போது 40 வயதை தொட்டுள்ளார். அதனால் 2024 கரீபியன் பிரிமியர் லீக் தொடருடன் ப்ராவோ ஓய்வு பெற்றுள்ளார்.

- Advertisement -

விடை பெற்ற ப்ராவோ:

குறிப்பாக செயின்ட் கிட்ஸ் அணிக்காக விளையாடிய அவர் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்யும் போது காயத்தை சந்தித்தார். அதுவே ஓய்வு பெறுவதற்கு சரியான தருணமாக கருதிய பிராவோ கண்ணீர் மல்க தன்னுடைய சொந்த மண்ணில் ஓய்வு பெற்றார். அவருக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் பிரியமானதுடன் விடை கொடுத்து வருகிறார்கள்.

முன்னதாக 2021 டி20 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ப்ராவோ ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். தோனி தலைமையில் சென்னை வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தற்போது பதிரனா போன்ற இளம் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார். இந்நிலையில் சிஎஸ்கே ஐபிஎல் அணியிலிருந்து பிராவோ விலகியுள்ளார்.

- Advertisement -

கொல்கத்தா அணியில் ப்ராவோ:

அங்கிருந்து வெளியேறியுள்ள அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தங்களுடைய புதிய ஆலோசகராக நியமித்துள்ளது. குறிப்பாக இந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல ஆலோசகராக முக்கிய பங்காற்றிய கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் காலியாக உள்ள ஆலோசகர் இடத்தில் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடைசியா விராட் கோலி 2015-ல பண்ணத இப்போ ரோஹித் சர்மா பண்ணியிருக்காரு – என்ன செய்தார் தெரியுமா?

இந்த அறிவிப்பு கொல்கத்தா ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு சிஎஸ்கே அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அடியாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். அதனால் மிகப்பெரிய அனுபவத்தை கொண்ட ப்ராவோவை சிஎஸ்கே நிர்வாகம் எப்படி தவறவிட்டது என்று அந்த அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்

Advertisement