இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த ஆட்டத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.
பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி :
அதனை தொடர்ந்து தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி இன்று செப்டம்பர் 27-ஆம் தேதி கான்பூர் நகரில் துவங்கிய இரண்டாவது போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
அதன்படி நடைபெற்று வரும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து வங்கதேச அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் நடைபெற்ற சம்பவம் தான் பலரையும் ஆச்சரிய படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது பெங்களூரு மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதற்கு அடுத்த தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த போட்டியில் தான் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். அதேபோன்று கான்பூர் மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்றுள்ள 24 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்வது இதுவே இரண்டாவது முறை.
இதையும் படிங்க : தோனியை விட எனக்கு ரோஹித் போதும்.. விராட் கோலி – ஜோ ரூட் ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுத்த யுவ்ராஜ்
இப்படி இந்த இரண்டாவது டெஸ்ட் முதலில் பந்துவீச்சை இந்திய அணி தேர்வு செய்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்திய அணி பொதுவாக சொந்த மண்ணில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது தான் வழக்கம். ஆனால் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது இருக்கும் நம்பிக்கை காரணமாகவே ரோஹித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.



