தோனியை விட எனக்கு ரோஹித் போதும்.. விராட் கோலி – ஜோ ரூட் ஆகியோரில் சிறந்தவரை தேர்ந்தெடுத்த யுவ்ராஜ்

Yuvraj Singh 5
- Advertisement -

நவீன இந்திய டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்களாக போற்றப்படுகின்றனர். குறிப்பாக அனுபவமில்லாத இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய தோனி 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற சாதனை படைத்தார். அத்துடன் ஐபிஎல் தொடரிலும் 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

மறுபுறம் தோனிக்கு முன்பாகவே மும்பை அணிக்காக 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்தார். அந்த அனுபவத்தால் இந்தியாவின் கேப்டனாக முன்னேறிய அவர் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றார். அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையும் ரோஹித் சர்மா சமன் செய்தார்.

- Advertisement -

யுவ்ராஜ் தேர்வு:

இந்நிலையில் தம்முடைய டி20 கிரிக்கெட் அணிக்கு தோனியை விட ரோஹித் சர்மாவையே கேப்டனாக தேர்ந்தெடுப்பேன் என்று யுவ்ராஜ் கூறியுள்ளார். மேலும் விராட் கோலி – தோனி ஆகியோரில் பெஞ்சில் அமர வைக்கக் கூடிய ஒரு வீரரின் பெயரை சொல்ல மாட்டேன் என்றும் யுவராஜ் தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் சேனலில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.

“ஒருவேளை அது டி20 கிரிக்கெட்டாக இருந்தால் நான் ரோஹித் சர்மாவுடன் துவங்குவேன். ஏனெனில் ஒரு வீரராக அவர் தன்னுடைய பேட்டிங்கை வைத்து போட்டியை தலைகீழாக மாற்றும் திறமை கொண்டவர். மேலும் அவர் ஒரு சிறந்த கேப்டன். எனவே ரோகித் சர்மா என்னுடைய முதல் தேர்வாக இருப்பார். தோனி, விராட் கோலி ஆகியோரில் பெஞ்சில் அமர வேண்டிய ஒருவரை நான் தேர்ந்தெடுத்தால் அது நாளை தலைப்புச் செய்தியாகி விடும்” என்று கூறினார்.

- Advertisement -

விராட் கோலி – ஜோ ரூட்:

அதே போல விராட் கோலியை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கருத்துக்கள் தற்போது காணப்படுகின்றன. அது பற்றி யுவராஜ் பேசியது பின்வருமாறு. “இது மிகவும் கடினமான தேர்வு. ஜோ ரூட் தற்போது சாதனைகளை உடைத்து வருகிறார். நீங்கள் எங்கே விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். ஒருவேளை இங்கிலாந்தில் விளையாடினால் கண்டிப்பாக ரூட்டை தேர்ந்தெடுக்கலாம்”

இதையும் படிங்க: தோனி, கங்குலி கிடையாது.. பாண்டிங் மாதிரி தைரியம் கொண்ட அவர் தான் சிறந்த இந்திய கேப்டன்.. யுவ்ராஜ் பேட்டி

“ஆனால் உலகின் மற்ற பகுதிகளில் நீங்கள் விளையாடினால் நான் விராட் கோலியை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் குறிப்பிட்ட சில பிட்ச்களில் அவர் நிறைய பாதிப்பை ஏற்படுத்துவார். ஃபார்ம் அடிப்படையில் கண்டிப்பாக தற்போது ஜோ ரூட் சிறந்த வீரராக உள்ளார். ஆனால் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான ஃபார்மட் என்று பார்த்தால் கண்டிப்பாக விராட் கோலி” எனக் கூறினார்.

Advertisement