டி20 உலககோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நட்சத்திர ஆல்ரவுண்டர் – அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு

Pretorius
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா பயணித்து வருகின்றனர்.

ICC T20 World Cup

- Advertisement -

அந்த வகையில் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள ஒரு சில வீரர்கள் திடீரென ஏற்படும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் இந்த டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான டுவைன் பிரிட்டோரியஸ் இந்த எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து அதிகாரவபூர்வமாக விலகியுள்ளார் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

dwaine pretorius

இந்தியாவுக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற அவர் அந்த தொடரில் மூன்றாவது போட்டியில் மட்டுமே விளையாடினார். அப்படி அந்த போட்டியில் விளையாடிய அவர் 26 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ஆனாலும் அந்த போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது அவர் டி20 உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான அந்த போட்டியில் இடது கால் கட்டை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் இந்த டி20 உலககோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அங்க பாருய்யா, உங்களை விட அவர் நல்லா பீல்டிங்ல பின்றாரு – இந்திய வீரர்களை கலாய்க்கும் ரசிகர்கள்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement