தீபக் சாஹரை தொடர்ந்து மற்றொரு சி.எஸ்.கே வீரர் விளையாடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – கலக்கத்தில் சி.எஸ்.கே

Deepak
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கி மே 29 வரை நடைபெற உள்ளது. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது மீண்டும் இந்தியாவில் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று நடப்புச் சாம்பியனாக இருக்கும் சிஎஸ்கே அணி இம்முறை பல புதிய வீரர்களை அணியில் இணைத்து விளையாட உள்ளது.

csk 1

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விளையாடிய சில வீரர்கள் வாங்கப்பட்டாலும் முக்கிய நட்சத்திர வீரர்களை சிஎஸ்கே அணி கழட்டி விட்டது.

அதிலும் குறிப்பாக டு பிளிசிஸ், ரெய்னா போன்றவர்களை சிஎஸ்கே அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளை தவற விடுவார் என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சி அளித்திருந்தது.

pretorious

இந்நிலையில் அதனை தொடர்ந்து மேலும் ஒரு நட்சத்திர வீரர் இந்த தொடரில் சி.எஸ்.கே அணிக்காக பல போட்டிகளை தவறு விடுவார் என்ற செய்தி வெளியாகி தற்போது வருத்தத்தை அதிகரித்துள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த 32 வயதான பிரிடோரியஸ் இம்முறை சிஎஸ்கே அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்காக சூரத் சென்று பயிற்சியை மேற்கொண்டு வரும் சிஎஸ்கே அணியில் வரும் நாட்களில் அடுத்தடுத்து வீரர்கள் இணைந்து பின்னர் மும்பை சென்று பயோ பபுளில் இணைவார்கள் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இருக்கும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அவர் பங்கேற்க இருப்பதால் மார்ச் 18-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை தென் ஆப்பிரிக்க அணியுடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் இந்தியா வந்து சிஎஸ்கே அணியில் இணைவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இப்படியே போனா ரோஹித் எவ்வளவு நாள் கிரிக்கெட் ஆடுவாருனு தெரியல – தினேஷ் கார்த்திக் ஓபன்டாக்

எப்படியும் ஏப்ரல் 12 க்கு மேல் அவர் வந்தால் கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர் குவாரண்டைனில் இருக்கும் பட்சத்தில் ஏப்ரல் 20 தேதிக்கு மேல் தான் அவரால் அணியில் இணைய முடியும் எனவே இவரும் சிஎஸ்கே அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளை தவற விடுவார். இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement