- Advertisement -
உலக கிரிக்கெட்

டி20 உலககோப்பை : மேலும் ஒரு நட்சத்திர வீரர் காயம் காரணமாக விலகல் – அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது ஆஸ்திரேலியா சென்றடைந்து விளையாடி வரும் வேளையில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பல நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டனர்.

அந்த வகையில் ஏற்கனவே பலவீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போதும் மேலும் சில வீரர்கள் போட்டியின்போது ஏற்படும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்தா சமீரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவினை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

30 வயதான துஷ்மந்தா சமீரா கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்காக மூன்று வகையான கிரிக்கெட்டிலும் பங்கேற்று விளையாடி வருகிறார். அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவருக்கு தற்போது காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகம் அதிகாரவபூர்வமாக அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தகுதி சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாடிய இலங்கை அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இருந்தது. அந்த போட்டியின் போது அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சமீராவின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

ஏனெனில் அந்த போட்டியில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் அந்த போட்டியின் போது இறுதி கட்டத்தில் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக வலியை உணர்ந்த சமீரா மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இதையும் படிங்க : முதல் பந்திலிருந்தே அவரால் சிக்ஸர் அடிக்க முடியும். அவரை பிளேயிங் லெவனில் சேருங்க – ரெய்னா கருத்து

பின்னர் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவரது காலில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பு காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது தற்போது இலங்கை அணிக்கு பெரிய வருத்தத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by