முதல் பந்திலிருந்தே அவரால் சிக்ஸர் அடிக்க முடியும். அவரை பிளேயிங் லெவனில் சேருங்க – ரெய்னா கருத்து

IND vs PAK Deepak Hooda INdia
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக சென்று வருகிறது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் 23-ஆம் தேதி இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பயிற்சி போட்டிகளின் அடிப்படையில் பிளேயிங் லெவன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அறிவித்திருந்தார்.

INDvsPAK

- Advertisement -

அதன்படி இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் மிகவும் பலமாக உள்ளதால் அதில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியின் டாப் பாடலில் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரும் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுவார்கள்.

மேலும் ஆல்ரவுண்டராக அக்சர் பட்டேலும் மீதமுள்ள நான்கு பந்து வீச்சாளர்களும் தற்போதைக்கு தயாராகவே உள்ளனர். ஆனாலும் தினேஷ் கார்த்தி-க்கு பதில் ரிஷப் பண்ட்டை அணியில் கொண்டு வர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Rishabh Pant 44

இது குறித்து அவர் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் நல்ல பார்மில் தான் இருக்கிறார். ஆனாலும் ரிஷப் பண்ட் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். எனவே அவர் இந்திய அணியின் ஒரு எக்ஸ் பேக்டராக இருப்பார். இடது கை ஆட்டக்காரராக அவர் பிளேயிங் லெவனில் இருப்பது அணிக்கு மேலும் பலத்தை தரும்.

- Advertisement -

ஏனெனில் முதல் பந்தில் இருந்தே எப்படி சிக்சர் அடிக்க முடியும் என்பதை ரிஷப் பண்ட் நன்கு அறிவார். அவருக்கு இடம் கொடுத்தால் எந்த நிலையிலும் ஆட்டத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வீரராக ரிஷப் பண்ட் விளையாடுவார் என நம்புகிறேன்.

இதையும் படிங்க : ஒரே நாளில் 3 போட்டி ரத்து – வேலையை ஆரம்பித்த மழை, இந்தியா – பாக் போட்டியின் 2வது கட்ட வெதர் ரிப்போர்ட் இதோ

ரோஹித் சர்மா அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேனை கொண்டு வருவது குறித்து யோசிக்க வேண்டும். தற்போது கூட அணியில் மாற்றத்தை கொண்டு வரலாம் என ரெய்னா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement