- Advertisement -
உலக கிரிக்கெட்

PAK vs RSA : ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடவேண்டம் என்று ரபாடாவிடம் சொன்னேன் – டூபிளிஸ்சிஸ்

உலகக் கோப்பை தொடரின் 30 ஆவது போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சர்பிராஸ் அகமது தலைமையிலான ஒரு பாகிஸ்தான் அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹாரிஸ் சோஹைல் 89 ரன்களும், பாபர் அசாம் 69 ரன்களும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 259 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியை சேர்ந்த ஹாரிஸ் சோஹைல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

போட்டி முடிந்து நேற்று பேட்டியளித்த தென்னாபிரிக்காவின் கேப்டன் டூபிளிஸ்சிஸ் கூறியதாவது : உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் போட்டிகளை ரபாடாவை விளையாட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டேன் ஆனால் அவன் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடினார். இதனால் அவருடைய வேகம் இந்த உலக கோப்பை தொடரில் சற்று குறைவாக இருந்தது மேலும் அவரது பந்துவீச்சை ஐபிஎல்லில் ஆடிய அனுபவத்தை வைத்துக்கொண்டு பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் அவரை சற்று சமாளித்து விட்டனர் என்றே கூற வேண்டும். எனவே இந்த தொடரில் அவரது பந்துவீச்சு சற்று சுமாராகத்தான் இருந்தது என்று கூறினார்.

- Advertisement -
Published by