- Advertisement -
ஐ.பி.எல்

டிகே’வுக்கு மரியாதை கொடுத்த விராட் கோலி.. ஆர்சிபிளே பிளே ஆஃப் செல்வதற்கு நிகழ வேண்டியது இதோ

கோடைகாலத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக மே நான்காம் தேதி நடைபெற்ற 52வது லீக் போட்டியில் குஜராத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. பெங்களூரு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஷாருக்கான் 37, ராகுல் திவாட்டியா 35 ரன்கள் எடுத்த உதவியுடன் 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய பெங்களூரு கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி 42, கேப்டன் டு பிளேஸிஸ் 64 ரன்கள் அடித்து 13.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். இப்போட்டியில் அடித்த 42 ரன்களையும் சேர்த்து இந்த வருடம் விராட் கோலி 542* ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள அவர் ருதுராஜ் கெய்க்வாட் வைத்திருந்த ஆரஞ்சு தொப்பியை மீண்டும் தன்வசமாக்கினார்.

- Advertisement -

பிளே ஆஃப் செல்லுமா:
அதனால் போட்டியின் முடிவில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆரஞ்சு தொப்பியை விராட் கோலிக்கு அணிவித்தார். அதை வாங்கிக் கொண்ட விராட் கோலி வலது கையை இதயத்தின் மீது வைத்து குனிந்து தினேஷ் கார்த்திக்கிற்கு தலை வணங்கியது தமிழக ரசிகர்களை பெருமையடைய வைத்தது. இந்த வெற்றியால் நீண்ட நாட்களாக 10வது இடத்தில் இருந்த பெங்களூரு அணி தற்போது 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பையும் பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டது. இந்த நிலையில் அந்த அணி பிளே ஆஃப் செல்வதற்கு நிகழ வேண்டியது என்ன என்பதை பற்றி பார்ப்போம். தற்போது 8 புள்ளிகளை பெற்றுள்ள பெங்களூரு அணி முதலில் கடைசி 3 போட்டிகளில் அதிக ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

அதே போல தற்போது லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிகள் 12 புள்ளிகளுடன் 3, 4வது இடங்களில் உள்ளன. எனவே அந்த 2 அணிகளும் தங்களுடைய கடைசி 4 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற வேண்டும். அப்படி நடந்தால் அந்த 2 அணிகளும் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். அத்துடன் தற்போது தலா 10 புள்ளிகளுடன் 5, 6வது இடங்களில் உள்ள சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்னும் 2 வெற்றிகளுக்கு மேல் பெறக்கூடாது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்காக மட்டும் அசத்தும் அவர் ஐபிஎல் வரலாற்றின் ஓவர்ரேட்டட் பிளேயர்.. பார்திவ் படேல் விளாசல்

அவ்வாறு நடந்தால் அந்த அணிகளும் 14 புள்ளிகளை பெறும். அது போக 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி அடுத்த 4 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற வேண்டும். அப்படி நடந்தால் பஞ்சாப் அணியும் 14 புள்ளிகளை மட்டுமே பெறும். மேற்குறிப்பிட்ட அம்சங்கள் நடந்தால் பெங்களூரு அணியும் 14 புள்ளிகளை பெற்றிருக்கும். அப்போது நல்ல ரன்ரேட்டை பெற்றிருந்தால் பெங்களூரு அணி பிளே ஆஃப் தகுதி பெறும். ஒருவேளை மேற்குறிப்பேற்ற மற்ற அணிகள் அதிக தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் அது பெங்களூருவின் வாய்ப்பை இன்னும் அதிகமாக்கும்.

- Advertisement -