இந்தியாவுக்கு எதிராக முரளிதரன் கூட செய்யாத உலக சாதனை படைத்த வெல்லலாகே.. தொடர்நாயகனாக பேட்டி

Wellalage 3
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் 27 வருடங்கள் கழித்து இலங்கை வென்றுள்ளது. அத்தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை கோட்டை விட்டு சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் மூன்றாவது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் 1997க்குப்பின் முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா தோல்வியை அவமான தோல்வியை சந்தித்தது. மறுபுறம் இலங்கையின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய துணித் வெல்லலாகே தொடர்நாயகன் விருதை வென்றார். குறிப்பாக 3வது போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

உலக சாதனை:
அத்துடன் கடந்த 2023 ஆசிய கோப்பையில் இதே கொழுப்பு மைதானத்தில் அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக 2 முறை 5 விக்கெட்டுகளை எடுத்த முதல் சுழல் பந்து வீச்சாளர் என்ற உலக சாதனையை துணித் வெல்லலாகே படைத்துள்ளார்.

இதற்கு முன் முத்தையா முரளிதரன் கூட இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. அந்த வகையில் இத்தொடரில் இந்தியாவை வீழ்த்தியது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் என்னுடைய கேப்டன், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்ததாலேயே நான் இங்கே இருக்கிறேன்”

- Advertisement -

“பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததால் நாங்கள் அதற்கு தகுந்தார் போல் அட்ஜஸ்ட் செய்து கொண்டோம். அது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளைப் போலவே இருந்தது. இன்றைய போட்டியில் நாங்கள் குறைந்த தவறுகளையே செய்தோம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் நல்ல வேலையை செய்தனர். அதே போல ஸ்பின்னர்களும் கச்சிதமாக பந்து வீசினார்கள்”

இதையும் படிங்க: 23 விக்கெட்ஸ்.. பிறப்பிலேயே இருக்கும் திறமையை மறந்து போன பேட்ஸ்மேன்கள்.. இந்தியா வரலாறு காணாத தோல்வி

“எங்கள் அணியில் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுத்துக் கொள்கிறோம். இந்த அணியில் இருப்பதற்கு நானும் சுவாரசியத்துடன் இருக்கிறேன்” என்று கூறினார். மறுபுறம் இந்த தோல்வி இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தியாவை ஒரு தொடரில் தோற்கடிப்பதற்கு இலங்கைக்கு கால் நூற்றாண்டுக்கு மேலான 27 வருடங்கள் தேவைப்பட்டதை நினைத்து ரசிகர்கள் பெருமையடைகின்றனர்.

Advertisement