இந்திய அணியில் எனக்கு பிடித்த வீரர் இவரே. அவரின் பிக்கப் அப் புல் ஷாட்டிற்கு நான் அடிமை – ஜே.பி டுமினி பேட்டி

- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டராக இருந்தவர் ஜேபி டுமினி. இவர் கடந்த வருடம் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வரும் இவர் கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர தயாராக உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு பிடித்த இந்திய வீரர் பற்றி பேசியுள்ளார் ஜேபி டுமினி. இதுகுறித்து அவர் கூறுகையில்…

எனக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன் ரோஹித் சர்மாதான் அவர் ஆடும் ஷாட்கள் அனைத்தும் அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவர் ஆடும் பிக்கப் புல் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரை பிடிப்பதற்கு இதுதான் காரணம் என்று கூறியுள்ளார் ஜே.பி டுமினி.

ரோகித் சர்மா கிட்டத்தட்ட விராட் கோலியின் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே கூறவேண்டும். தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வருகிறார். டி20 சர்வதேச போட்டிகளில் 4 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் என பட்டையைக் கிளப்பி வருகிறார். கடந்த ஆண்டுகளில் மட்டும் 6 சதங்களை அடித்து விளாசியுள்ளார்.

இதில் 5 சதங்கள் உலக கோப்பை தொடரில் மட்டுமே விளாசியது. மேலும், 9 உலக கோப்பை போட்டியில் விளையாடிய அவர் 648 ரன்கள் குவித்துள்ளார். தற்போது வரை 224 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 8,500 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக சேர்த்து சர்வதேச போட்டிகள் அனைத்திலும் சேர்த்து 14,000 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா.

Advertisement