போட்டிக்கு முன்னரே தெ.ஆ வீரருக்கு உறுதியான கொரோனா தொற்று – மறைத்து நாடகமாடியதா தென்னாப்பிரிக்கா

Olivier
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே போட்டியாக துவங்கிய இந்த போட்டியில் இந்திய அணியானது முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டாக அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 197 ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தற்போது மூன்றாம் நாளில் முடிவில் தங்களது இரண்டாவது இன்னிங்சில் 16 ரன்களை குவித்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.

rahul

- Advertisement -

ஒட்டுமொத்த இரண்டாவது இன்னிங்சில் இதுவரை 146 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளதால் வெற்றி பெறவும் அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஒரு தென்ஆப்பிரிக்க வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆனால் அதனை கிரிக்கெட் நிர்வாகம் மறைந்ததாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தென்னாப்பிரிக்க நாட்டில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்திய அணி அங்கு பெரிய கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் தென்ஆபிரிக்க வீரருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Olivier

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் கூறுகையில் : எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது இப்போது கிடையாது இந்த தொடர் ஆரம்பிக்கும் முன்னரே அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு முறையான சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அணியில் இணைக்கப்பட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 24 வயதிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – குவியும் வாழ்த்துக்கள்

இதன்காரணமாக இந்த விடயத்தில் எந்த கவலையும் வேண்டாம். அவர் முதலாவது போட்டியில் விளையாடாததற்கு காரணம் அவர் சற்று சோர்வாக இருப்பதால் விளையாடவில்லை. அவருக்கு தொற்று முழுவதும் பூரண குணமடைந்து விட்டது என்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement