24 வயதிலேயே தோனியின் மிகப்பெரிய சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் – குவியும் வாழ்த்துக்கள்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 வயதிலேயே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி இந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த ரிஷப் பண்ட் 97 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்தார். மேலும் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த கீப்பராக மாற அவருக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.

pant 2

- Advertisement -

இவருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பராக தோனி இருந்தார். அவர் தனது 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் விழு காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை இந்த முதலாவது ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

இந்த முதலாவது இன்னிங்சில் மூன்று கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் விரைவாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அவரோடு சேர்த்து தோனி, கிரண் மோரே, மோங்கியா, சையத் கிர்மானி, சகா ஆகிய 6 விக்கெட் கீப்பர்கள் டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் அவர் சதம் அடித்து அசத்தினார். பேட்டிங்கில் அற்புதமாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தற்போது விக்கெட் கீப்பிங் அசத்தி வருகிறார். தனது 24வது வயதில் 26 போட்டிகளில் மட்டுமே விளையாடி 100 விக்கெட்டுகளை தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விழ காரணமாக இருந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : வீடியோ : கணுக்கால் மடங்கிய நிலையில் பலத்த காயமடைந்து வலியுடன் வெளியேறிய பும்ரா – விளையாட முடியுமா?

நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தோனியின் சாதனையும் அவர் முறியடிப்பார் என்று தெரிகிறது. தோனி இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 294 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்துள்ளார். அந்த சாதனையையும் ரிஷப் பண்ட் முறியடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement