இந்திய அணியில் இத்தனை அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பளித்தது ஏன் ? – கோச் டிராவிட் கொடுத்த விளக்கம்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் இந்திய அணியில் நான்கு வீரர்கள் அறிமுக வீரர்கள் களமிறங்கினர். அதன்படி துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், மூன்றாவது வீரராக தேவ்தத் படிக்கல், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா மற்றும் பந்து வீச்சாளர்களில் சேத்தன் சக்காரியா ஆகியோர் நேற்று 2வது டி20 போட்டியின்போது இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகினர்.

IND

- Advertisement -

இந்த போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்திய அணியில் அவரோடு சேர்த்து ஒன்பது வீரர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற காரணத்தினால் இந்த வீரர்கள் தற்போது இந்த இரண்டாவது போட்டியிலும் அடுத்த கடைசி போட்டியிலும் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் இப்படி தொடர்ந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து போட்டி முடிந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : இலங்கை தொடருக்கான அனைத்து வீரர்களுமே மிக திறமையான வீரர்கள் தான் எல்லோரும் அவர்களது திறனை சரியான இடத்தில் நிரூபித்து தான் இந்த வாய்ப்பை பெற்று உள்ளார்கள்.

dravid 1

20 25 பேர் கொண்ட குழுவில் 11 பேர் விளையாடுவது என்பது திறமைக்கான பரிசு. அதனால் கிடைக்கும் வாய்ப்பை யாரும் தவற விடாமல் சிறப்பாக விளையாட வேண்டும். இதுவரை இந்திய அணி விளையாடிய விதம் எங்களுக்கு திருப்தி அளிக்கிறது. ஒருநாள் போட்டியின் போது முதல் இரண்டு ஆட்டங்களையும் நாங்கள் கைப்பற்றி இருந்ததால் மூன்றாவது போட்டியில் சில வீரர்களுக்கு அறிமுகம் வாய்ப்பை வழங்கினோம்.

Varun

ஆனால் தற்போது டி20 தொடரை பொறுத்தவரை தவிர்க்க முடியாத சூழல் காரணமாகவே பல புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் அவர்களும் திறமையான வீரர்கள் தான் இங்கு வந்திருக்கும் அனைத்து வீரர்களும் பிளேயிங் லெவனில் விளையாட தகுதியான வீரர்கள் என்பதாலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. கிடைக்கும் வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்திக் கொண்டால் போதும் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement