ப்ளீஸ். இவங்களோட டேலன்ட்டை வேஸ்ட் பண்ணாதீங்க. பி.சி.சி.ஐ அதிகாரிகள் கூட்டத்தில் – வெளிப்படையாக பேசிய டிராவிட்

dravid

பிசிசிஐ மற்றும் என்.சி.ஏ வால் ஏற்படுத்தப்பட்ட வெப்மினார் கூட்டம் அண்மையில் நடைபெற்ற நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ சார்பாக சில அதிகாரிகளும், எம்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் மற்றும் சுஜித் சோமசுந்தர், பயிற்சியாளர் ஆஷிஷ் கௌசிக் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வெப்மினார் கூட்டத்தில் கிரிக்கெட் குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என பலதரப்பட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Dravid

இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் வீரர்களின் பயிற்சி குறித்த ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டன. அப்போது பேசிய என்.சி.ஏ தலைவர் ராகுல் டிராவிட் கூறுகையில் : மாநில அளவிலான கிரிக்கெட் குழுக்கள் முன்னாள் வீரர்களை அவர்களது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அந்தந்த மாநிலங்களில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், கிரிக்கெட்டில் அவற்றை ஒருங்கிணைக்க முடிந்தால் அவர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவமும் வீணாகாமல் வீரர்களுக்கு பயன்படும் என்று பேசியுள்ளார். மேலும் இந்தக் கலந்துரையாடலில் கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி கள் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் அதனால் மாநில கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மூலம் வீரர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கலாம் என்று கூறப்பட்டது.

Practice

டிராவிட் கூறிய இந்த கருத்தில் அந்தந்த மாநில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவர்களது அனுபவத்தை வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்களுக்கு பகிர்ந்தால் இளம் வீரர்களின் கிரிக்கெட்டிற்கு அது முன்னேற்றமாக அமையும். மேலும் முன்னாள் வீரர்களின் அந்த அனுபவத்தினையும் விரயம் செய்யாமல் வீணாக்காமல் வளர்ந்துவரும் இளைஞர்களிடையே அதனை கொண்டு சேர்க்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

dravid

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னாள் வீரர்களின் அனுபவத்தை அம்மாநிலத்தில் இளம் வீரர்களுக்கு கொண்டு சென்று அவர்களை பயிற்றுவிக்க வேண்டும் என்றும் டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.