இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜெயிக்கப்போவது இவங்க தான் – ராகுல் டிராவிட் கணிப்பு

Rahul

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடைபட்டு உள்ளதால் அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய அணி இம்மாத இறுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இங்கிலாந்திற்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதே இந்திய அணியே இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Ind-lose

அதன் காரணமாக தற்போது இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முடித்துவிட்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருப்பதால் இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல அணிகளையும் தொடர்ந்து வீழ்த்தி வருவதால் இங்கிலாந்து அணியை அவர்களது மண்ணில் வீழ்த்த இம்முறை ஒரு அருமையான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த தனது கணிப்பை ராகுல் டிராவிட் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த இம்முறை இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இங்கிலாந்து அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் நமது அணியில் பேட்ஸ்மேன்கள் நல்ல திறனுடன் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்திய அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக அஸ்வின் ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் ஆகியோருக்கு எதிராக சிறப்பாக பந்து வீசுவார். அதேபோன்று இங்கிலாந்து அணியில் முதல் 6-7 பபேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால் அதில் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனாக ரூட் திகழ்கிறார்.

- Advertisement -

INDvsENG

அதேபோன்று ஸ்டோக்ஸ்க்கும் நல்ல பார்மில் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் எதிரே அஸ்வின் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம். இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்றே நான் கருதுகிறேன். என்னை பொறுத்த வரை இந்திய அணி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தும் என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement