இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் இவர்தான் கோச் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Dravid

விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, சிராஜ் ஆகிய முன்னனி வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சென்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரிலும் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடரானது செப்டம்பர் மாதம்தான் முடிவடையும் என்கிற நிலைமையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வருகிற ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து செல்லவிருக்கும் வீரர்களை தவிர்த்துவிட்டு, இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்யும் நோக்கத்தில் இருக்கிறது பிசிசிஐ. மேலும் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக, இந்தியாவின் முன்னால் பேட்மேனான ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்திற்கு செல்லவிருக்கும் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் செல்லவிருப்பதால், இலங்கைக்கு எதிரான தொடரில் ஒரு பயிற்சியாளரை நியமிக்கும் கட்டாயம் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி பார்த்தால் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் ராகுல்ட் ராவிட் தான் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தகுந்த நபராக இருப்பார். ஏனெனில் ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்ட இந்திய அணிதான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையையும் கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும்,

rahul-dravid

இலங்கைக்கு எதிரான தொடரில் அதிகமான இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்கப் போகிறார்கள் என்பதால் அவர்களை சிறப்பாக வழிநடத்த, ஏற்கனவே இளம் வீரர்களை சிறப்பாக வழிநடத்திய அனுபவம் உள்ள ராகுல் டிராவிட்டால் தான் முடியும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, அனுபவம் வாய்ந்த வீரர்கள் காயத்தால் அத்தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

- Advertisement -

dravid

அதனையடுத்து இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு விளையாடியபோது, ராகுல் ட்ராவிட்டை இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ஆஸ்திரேலியா அனுப்பும் திட்டத்தில் இருந்த பிசிசிஐ, அதன்பிறகு அத்திட்டத்தை கைவிட்டது. ஆனால் இப்போது இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு கண்டிப்பாக ராகுல் ட்ராவிட்டைத் தான், பிசிசிஐ பயிற்சியாளராக நியமிக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துகூறி வருகின்றனர்.

Advertisement