பகலிரவு போட்டியால் மட்டும் மாற்றம் வராது. இதையும் சேர்த்து பண்ணுங்க. கங்குலிக்கு ஐடியா கொடுத்த – டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நாளை மறுதினம் 22 ஆம் தேதி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

Pink-ball

- Advertisement -

இந்தியாவில் பிறந்து டெஸ்ட் போட்டிகள் பகலிரவு ஆட்டமாக நடைபெற இருப்பது சிறப்பான விடயமாக பார்க்கப்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்ற இது மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் பலவற்றை செய்ய வேண்டும். பகலிரவு டெஸ்ட் போட்டிகள் வருடம் தோறும் பல நாட்களில் நடைத்தும் திட்டத்தினை நெறிப்படுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்ற பகல் இரவு போட்டிகள் ரசிகர்களை அதிகம் கவரும் என்று நான் நினைக்கிறேன். மேலும் போட்டியை ரசிகர்கள் நேரில் வந்து காணுவதற்கு இது மட்டும் போதாது. ரசிகர்கள் மைதானத்திற்கு வராததற்கு காரணம் தூய்மை இல்லாத கழிப்பறைகள், அடிப்படை வசதிகள் இல்லாத சீட், உட்காரும் இருக்கைகள் மற்றும் கார் பார்க்கிங் என பல இடையூறுகளை ரசிகர்கள் சந்திப்பதால் அவர்கள் மைதானத்திற்கு நேரில் வரவிரும்புவதில்லை. அந்த விடயங்களை நாம் சரி செய்ய வேண்டும்.

Indian-Fans

அதே போன்று முன்பெல்லாம் எச்டி டிவி மொபைல் போன்கள் எல்லாம் இல்லை. எனவே ரசிகர்கள் நேரில் வந்து போட்டியை ரசித்தனர். ஆனால் இப்போது டிவி செல்போன் என அனைத்தும் வந்துவிட்டதால் கூட்டத்தில் நெருக்கடியில் போட்டியிட ரசிப்பதை விட வீட்டிலேயே உட்கார்ந்து ரசிக்கிறார்கள். மக்களிடம் அந்த எண்ணத்தை போக்கி மைதானத்திற்கு நேரடியாக வருவதற்கு நாம் பல திட்டங்களை வகுக்க வேண்டும். அதன்படி புத்தாண்டு அன்று டெஸ்ட் போட்டி, தீபாவளி பொங்கல் போன்ற சிறப்பு தினங்களில் நாம் டெஸ்ட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தால் அதன் மூலம் ரசிகர்கள் குடும்பத்தோடு போட்டியை வந்து ஒரு வழியாக அது அமையும்.

எனவே இது போன்ற விசேஷ நாட்களில் போட்டிகளை நாம் நடத்த வேண்டும். அதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்த்து எடுக்க முடியுமென்றும் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முறையாக செய்து கொடுக்க வேண்டும். இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி சிந்தித்து செயல்பட்டால் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் முன்னேற்றம் அடையும் என்றும் டிராவிட் தனது ஆலோசனையை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement