முறைப்படி அறிவிக்கப்பட்ட டிராவிடின் வருகை – இனி இந்திய அணிக்கு எல்லாமே சக்ஸஸ் தான்

Dravid
- Advertisement -

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த பல ஆண்டுகளாக பதவி வகித்து வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலக கோப்பை தொடருடன் நிறைவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த பயிற்சியாளராக இந்திய அணிக்காக யார் செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரது மத்தியிலும் இருந்தது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரையே பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்பியது.

shastri 1

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்திய அணிக்காக டிராவிட் பயிற்சியாளராக செயல்பட உள்ள முதல் தொடராக இந்தியா நியூசிலாந்து தொடர் அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி மற்றும் இந்திய ஏ அணியை பயிற்சியாளராக வழி நடத்திய டிராவிட் பல சிறப்பான இளம் வீரர்களை இந்திய அணிக்கு கொடுத்துள்ளார். டிராவிடின் தலைமையில் நிச்சயம் இந்திய அணி எழுச்சி பெறும் என்று கூறப்படுகிறது.

Dravid

மேலும் அண்மையில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் இடைக்கால பயிற்சியாளராக டிராவிட் சிறப்பான பங்களிப்பை அளித்து இருந்தார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளர் ஆக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : இவரோட வருகை இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது. ஆப்கான் அணிக்கெதிரான வெற்றி குறித்து – விராட் கோலி பேட்டி

ஏற்கனவே பல இளம் வீரர்களை உருவாக்கி முதன்மை அணிக்கு வழங்கிவந்த டிராவிட் தற்போது இந்திய அணியை பட்டை தீட்ட உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது தலைமையில் நிச்சயம் இந்திய அணி பல வெற்றிகளைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement