டிராவிட் தவிர வேற யாரும் முன்வரல. நேரடியாக மீண்டும் அவருக்கே அந்த பதவி – அப்போ கோச் ஆகமாட்டாரா ?

Dravid
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் விளையாடிய பல இளம் வீரர்கள் இன்று இந்திய அணியின் முன்னணி வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் சிறப்பான பல இளம் வீரர்களை இந்திய அணிக்கு அளித்த ராகுல் டிராவிட் அடுத்ததாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார்.

Dravid

- Advertisement -

தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளதால் அவர் தனது சொந்த மாநிலத்திலேயே கிரிக்கெட் பணியை மேற்கொள்ள விரும்பி தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவரது இரண்டு ஆண்டு பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் அடுத்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவருக்கான பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

மேலும் அதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் மீண்டும் ராகுல் டிராவிட்டை தவிர்த்து மற்ற யாரும் அந்தப் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பவில்லை. இதனால் விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடுவை பிசிசிஐ தற்போது இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் ரவிசாஸ்திரி இந்திய அணியுடன் இருப்பதால் அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார்.

Dravid

ரவிசாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பதிவியில் இருந்து விலகும் பட்சத்தில் ராகுல் டிராவிட் அடுத்த பயிற்சியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விருப்பம் தெரிவித்துள்ளதால் டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக மாற விருப்பம் இல்லை என்று தோன்றுகிறது.

Dravid

ஏனெனில் விதிமுறைப்படி ஒரே நபர் இரண்டு பதவிகளுடன் இரட்டை பதவி வகிக்கக் கூடாது என்பதால் டிராவிட் தற்போது பயிற்சியாளராக மாற விருப்பமில்லை என்று தெரியவந்துள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரோடு ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் புதிதாக பயிற்சியாளர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Advertisement