இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்த 2 முன்னாள் வீரர்களுக்கு தான் – அதிக வாய்ப்பாம்

Shastri
- Advertisement -

இந்திய அணியின் தற்போதைய முதன்மை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் இந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி ரவிசாஸ்திரி தான் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று தெரிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக பயிற்சியாளராக பதவியேற்ற ரவிசாஸ்திரி 2019 வரை நியமிக்கப்பட்டிருந்தார். அதன்பிறகு கேப்டன் கோலியின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பயிற்சியாளராக தனது பொறுப்பை தொடர்ந்த ரவிசாஸ்திரி தற்போதைய டி20 உலக கோப்பை தொடர் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

Shastri

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக் கோப்பைத் தொடரோடு முதன்மை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவருடைய உதவியாளர்களான பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் பதவி விலகுகின்றனர். இதில் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டும் இந்திய அணியுடன் தொடர விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வருவதாக வெளியான தகவலின் படி :

ஏற்கனவே புதிய பயிற்சியாளருக்கான தேடல் தற்போது நடைபெற்று வருவதாகவும், டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு புதிய பயிற்சியாளர் குறித்து அதிகாரபூர்வ முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் பெறப்படும் என்றும் அதில் ரவி சாஸ்திரிக்கு மாற்றாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருக்கு இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

sehwag

ராகுல் டிராவிட் ஏற்கனவே 19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கும், இந்திய ஏ அணிக்கும் பயிற்றுவித்த அனுபவம் உடையவர். ஆனால் சேவாக் இதுவரை பயிற்சியாளராக எந்த வித அனுபவம் இல்லாதவர் இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அனுபவம் உடையவர் என்பதும் ஐபிஎல் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயல்பட்டு உள்ளதாலும் நிச்சயம் அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பார் என்று தெரிகிறது.

Dravid

அதன்படி இந்த புதிய பயிற்சியாளருக்கான போட்டியில் இவர்கள் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி இருக்கும் என்றும் அவர்கள் இருவருக்கே புதிய பயிற்சியாளராக அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. புதிய பயிற்சியாளர் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து செயல்படுவார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement