IPL 2023 : ஐபிஎல் வரலாற்றின் அருவருப்பான இன்னிங்ஸ், ஸ்கூல் கிரிக்கெட் மாதிரி இருக்கு – கேஎல் ராகுலை விளாசும் முன்னாள் வீரர்

KL-Rahul
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் கர்நாடகாவை சேர்ந்த நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் மட்டும் தொடர்ந்து மந்தமாக செயல்பட்டு வருவது ரசிகர்களுக்கு கடுப்பாக அமைந்து வருகிறது. முன்னாதாக 2019 வாக்கில் அதிரடியாக செயல்பட்டு இந்திய அணியில் நிலையான தொடக்க வீரராக உருவெடுத்த அவருடைய ஐபிஎல் மார்க்கெட் 17 கோடி என்ற உச்சத்தை எட்டியது. அதனால் நாளடைவில் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர் சொற்ப ரன்களில் அவுட்டாவது அல்லது கடைசி நேரத்தில் அவுட்டாகி தம்முடைய அணி தோல்வியை சந்திக்கும் வகையில் செயல்பட்டதை ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து விமர்சித்தார்கள்.

அந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் சந்தித்த காயத்துக்கு பின் ஃபார்மை இழந்து முன்பை விட மோசமாக செயல்படும் அவர் அடித்து நொறுக்க வேண்டிய ஓப்பனிங் இடத்தில் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி சொற்ப ரன்களில் அவுட்டானது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் இந்திய அணியில் அவர் இழந்த ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியை மீண்டும் வசப்படுத்த இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ளார்.

- Advertisement -

அருவருப்பான இன்னிங்ஸ்:
இருப்பினும் 8 (12), 20 (18), 35 (31) என முதல் 3 போட்டிகளில் அதற்கான முயற்சியை எடுக்காமல் தடவலாகவே செயல்பட்ட அவர் பெங்களூருவுக்கு எதிரான 4வது போட்டியில் 213 ரன்களை துரத்தும் போது கெய்ல் மேயர்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே லக்னோ 23/3 என தடுமாறியதால் நங்கூரமாக விளையாடினார். ஆனால் 12 ஓவர்கள் வரை களத்தில் இருந்த அவர் நன்கு செட்டிலாகியும் கடைசி வரை அதிரடியை துவக்காமல் 18 (20) ரன்களில் 90.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவுட்டாகி எஞ்சிய பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

நல்ல வேளையாக அவர் அவுட்டானதால் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரான் அடித்து நொறுக்கி 62 (19) ரன்கள் குவித்ததுடன் கடைசி கட்ட ஓவர்களில் பெங்களூரு நிகழ்த்திய சொதப்பலால் லக்னோ 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஆனால் ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் தொட்டாலே சிக்சர்கள் பறக்கக்கூடிய அளவில் சிறிய சின்னசாமி மைதானத்தில் கூட கேப்டனாக முன்னின்று விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் அதிரடி காட்ட வேண்டிய அவர் இவ்வளவு தடவலாக பேட்டிங் செய்து இதர வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது ரசிகர்களிடம் உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதனால் இந்தியாவுக்காக தான் சரியாக விளையாடவில்லை ஆனால் ஐபிஎல் தொடரில் வாங்கும் 17 கோடி சம்பளத்திற்கு கொஞ்சமாவது அடியுங்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் ஃபிளாட்டான பிட்ச்சில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியில் கூட 18 (20) ரன்களை எடுத்த கேஎல் ராகுல் ஐபிஎல் வரலாற்றில் அருவருக்கத்தக்க இன்னிங்ஸ் விளையாடியதாக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன் ஸ்கூல் கிரிக்கெட்டை போல ராகுல் விளையாடுவதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி தனது ட்விட்டரில் நேரடியாக பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

“213 என்ற பெரிய இலக்கை துரத்தும் போது பவர் பிளே ஓவர்களில் அதிரடியை காட்டும் அளவுக்கு கேஎல் ராகுலிடமிருந்து ஒரு ஷாட் கூட வரவில்லை. அவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பது நமக்கு தெரியவில்லை. இது போல நீங்கள் பேட்டிங் செய்ய முடியாது”

இதையும் படிங்க:LSG vs RCB : என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை அவங்க 2 பேருக்காக டெடிகேட் பண்றேன் – நிக்கோலஸ் பூரன் ஓபன்டாக்

“ராகுல் விளையாடிய இந்த இன்னிங்ஸ் இந்தப் போட்டியின் சூழ்நிலையை பொறுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே விளையாடப்பட்ட மிகவும் அருவருப்பான இன்னிங்ஸ் ஆகும். அவருடைய மனதில் என்ன தான் இருக்கிறது? இந்த அளவில் இதே போல நீங்கள் நீண்ட காலமாக இவ்வாறு விளையாட கூடாது. இது ஒன்றும் ஸ்கூல் கிரிக்கெட் அல்ல” என்று கூறியுள்ளார்.

Advertisement