2011க்குப்பின் சாதிக்க.. முன்னாள் இந்திய வீரரை பயிற்சியாளராக நியமித்த கென்யா.. ஆப்கானிஸ்தான் போல அசத்துமா?

Kenya
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 1995 – 2005 காலகட்டங்களில் ஜிம்பாப்வே, கென்யா போன்ற நாடுகள் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட டாப் அணிகளுக்கே சவால் கொடுத்தன. குறிப்பாக கென்யா அணி 2003 உலகக் கோப்பையில் நன்றாக விளையாடி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இருப்பினும் செமி ஃபைனலில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த கென்யா கடைசியாக 2011 உலகக் கோப்பையில் விளையாடியது.

இந்நிலையில் கென்யா கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவை சேர்ந்த அவர் 1994 – 2005 வரை உள்ளூர் கிரிக்கெட்டில் 104 முதல் தர போட்டிகளிலும் 89 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதில் 493 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் 1997 காலகட்டத்தில் இந்தியாவுக்காக 4 டெஸ்ட் மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

2027 திட்டம்:
அந்த வகையில் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் தற்போது கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஒரு வருடம் செயல்பட உள்ளார். குறிப்பாக வரும் செப்டம்பர் மாதம் கென்யா மண்ணில் ஐசிசி 2027 உலகக் கோப்பையின் சேலஞ்ச் லீக் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பைக்கு தகுதி பெற முடியும்.

எனவே அந்தத் தொடரில் வெற்றி பெற தங்களுடைய அணிக்கு உதவுவதற்காக டோட்டா கணேஷை கென்யா வாரியம் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இது பற்றி டோட்டா கணேஷ் பேசியது பின்வருமாறு. “கென்யா அணியை உலகக் கோப்பைக்கு தகுதி வர வைப்பதே என்னுடைய முதல் தொலைநோக்கு பார்வையாகும். கென்யா 1996, 1999, 2003, 2007, 2011 உலகக் கோப்பைகளில் பங்கேற்றது”

- Advertisement -

“அவர்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நான் பார்த்துள்ளேன். இருப்பினும் கடந்த 10 வருடங்களில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. நான் வரலாறு பற்றி பேசவில்லை. கென்யர்களை நேர்மறையான சாம்பியன்களாக பார்க்கிறேன்” என்று கூறினார். முன்னதாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.

இதையும் படிங்க: யார் சொன்னாலும் அதை மாற்றாதீங்க.. முனாப் படேல் மாதிரி ஆகிடுவீங்க.. உம்ரான் மாலிக்கிற்கு பதான் அட்வைஸ்

அவருடைய உதவியுடன் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை முதல் முறையாக தோற்கடித்த ஆப்கானிஸ்தான் புதிய வரலாறு படைத்தது. அதே போல தற்போது மற்றொரு முன்னாள் இந்திய வீரர் கென்யா அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அவருடைய தலைமையில் கென்யா 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றால் அது இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைக்கும் அம்சமாகவே இருக்கும்.

Advertisement