டி20 உலகக்கோப்பைக்கு அவரை மட்டும் நம்பாதீங்க – தேர்வுக்குழுவை எச்சரிக்கும் பாக் வீரர்

Bhuvaneswar Kumar
Advertisement

விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையிலும் அதற்கு முன்னோட்டமாகவும் அரபு நாடுகளில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்று வருகிறது. இதில் இதர அணிகளைக் காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய இந்தியா எளிதாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பைனலுக்கு கூட செல்லாமல் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் இங்கேயே கோப்பையை தக்க வைக்காமல் தவறவிட்ட இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே டி20 உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என்றும் இந்திய ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Bhuvneshwar Kumar

தவறான அணி, தேர்வு சுமாரான கேப்டன்ஷிப் என்பதைவிட தேர்வு செய்யப்பட்ட முக்கிய வீரர்கள் முக்கிய நேரங்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பேட்டிங் துறையில் விராட் கோலியை தவிர்த்து கேஎல் ராகுல் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அனைவரும் முக்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய 2 முக்கிய பந்துவீச்சாளர்கள் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியதால் பொறுப்புடன் செயல்பட வேண்டிய வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் சொதப்பலாக செயல்பட்டார்கள்.

- Advertisement -

சொதப்பிய புவி:
குறிப்பாக ஏற்கனவே 4 பேருக்கு பதில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் பும்ரா போன்ற முக்கிய பவுலர்கள் இல்லை என்று தெரிந்தும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பவர்பிளே ஓவர்களில் அசத்தினாலும் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வாரி வழங்கினார். அதிலும் நிச்சயம் வென்றே தீர வேண்டிய சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக 19வது ஓவரில் எதிரணிக்கு முறையே 25, 21 ரன்கள் தேவைப்பட்டபோது அனுபவத்தை கொஞ்சமும் காட்டாமல் முறையே 19, 14 ரன்களை வாரி வழங்கி வெற்றியை பரிசளித்தார்.

Bhuvneshwar-Kumar-1

ஆனால் அவரை விட இளம் பந்து வீச்சாளரான அர்ஷிதீப் சிங் அவர் ஏற்படுத்திய அழுத்தத்தையும் தாண்டி அந்த 2 போட்டிகளிலுமே கடைசி ஓவரில் 7 ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில் முடிந்தளவுக்கு போராடி 5வது பந்து வரை போட்டியை இழுத்து வந்தார். அதனால் விமர்சனங்களை சந்தித்த புவனேஸ்வர் குமார் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் பவர்பிளே ஓவர்களில் தன்னுடைய பலத்தை வெளிப்படுத்தி புதிய பந்தை ஸ்விங் செய்து 4 ரன்களை மட்டும் சாய்த்து 5 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

கடைசியில் அடி:
இதிலிருந்து பவர் பிளே ஓவர்களில் புதிய பந்தை அற்புதமாக ஸ்விங் செய்து மிரட்டும் புவனேஸ்வர் குமார் கடைசி கட்ட ஓவர்களில் சரமாரியாக அடி வாங்குவது உலகிற்கே அம்பலமாகியுள்ளது. இருப்பினும் விரைவில் நடைபெறும் உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ராவுடன் களமிறங்கப் போகும் முதன்மை பந்துவீச்சாளராக அவர் தேர்வு செய்யப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஓரளவு வேகத்துக்கு கைகொடுத்த துபாயிலேயே இவ்வளவு திணறிய இவருடைய ஸ்விங் மற்றும் 140 கி.மீட்டரை தொடாத வேகம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் தரமான எதிரணிகளுக்கு எதிராக எந்த வகையிலும் இந்தியாவுக்கு பயனளிக்காது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் எச்சரித்துள்ளார்.

Butt

அதனால் உலக கோப்பையில் அவரை யோசித்து தேர்வு செய்யுமாறு கூறியுள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஆரம்ப கட்ட ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கும் அவர் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகிறார். இங்கு (துபாயில்) பந்து சற்று ஸ்விங் ஆகிறது. ஆனால் தரமான அணிகள் அவரது ஸ்விங்கில் எளிதாக தப்பித்து விடும். அவருடைய பந்துவீச்சு எதிர்கொள்வதற்கு கடினமாக இல்லை.

- Advertisement -

பெரும்பாலும் பவர் ஹிட்டர்களாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் நல்ல டெக்னிக் தெரிந்திருக்காத காரணத்தாலேயே அன்றைய நாளில் அவருடைய ஸ்விங்கில் தப்பிக்க முடியவில்லை”

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டிலிருந்து அவரை ஓரங்கட்டுனது முட்டாள் தனம் – இந்திய நிர்வாகத்தை விளாசிய சேவாக்

“மேலும் கடைசி கட்ட ஓவர்களில் புவனேஸ்வர் குமார் வேகமாக பந்து வீச தடுமாறுகிறார். அவரிடம் வேகம் இல்லாததால் கடைசி கட்ட ஓவர்களில் அவரை அடிக்க உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் பயப்படுவதில்லை. எனவே டி20 உலகக்கோப்பையில் அவர் இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை” என கூறினார்.

Advertisement