
இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் இருந்து வந்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது நேற்று தங்களது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்திருந்தனர். அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 222 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்கியும் அந்த அணி தங்களது முதல் தோல்வியை சந்தித்தது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்கத்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மிகச் சிறப்பாக இலக்கை நோக்கி நகர்ந்தது. ஆனாலும் மிடில் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 151 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த நேரத்தில் ஐந்தாவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த டோனவன் பெரேரா மற்றும் ஷுபம் துபே ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 32 பந்துகளில் 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இந்த போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனவன் பெரேரா 26 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 52 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ஆட்டநாயகன் டோனவன் பெரேரா கூறியதாவது : இந்த போட்டியில் நான் எல்லா பந்தையும் அடித்து ஆட வேண்டும் என்று நினைக்கவில்லை. சரியாக கால்குலேட் செய்து நல்ல பந்து கிடைத்தால் பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் இந்த மைதானத்தில் முறையான ஷாட்டுகளை விளையாடினால் ரன்கள் வரும் அதே வேளையில் ஒரு சில ஓவர்களில் நிறைய ரன்கள் வரும்போது போட்டியில் பிரஷரும் நீங்கும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : இந்த சேஸிங்கில் எங்களோட பிளான் இதுதான்.. அதை சரியா செய்ஞ்சிருக்கோம்.. வெற்றிக்கு பிறகு – ரியான் பராக் பேட்டி
அந்த வகையில் நான் என்னுடைய ரேஞ்சில் இருந்த பந்துகளை அடித்து விளையாடினேன். பிறகு ஷுபம் துபே பேட்டிங் செய்ய வந்ததும் என் மீது இருந்து அழுத்தத்தை குறைத்து விட்டார். ஏனெனில் அவரது அற்புதமான இன்னிங்ஸ் என் மீது இருந்து அழுத்தத்தை வெளியே கொண்டு சென்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றியை தேடித்தர வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அந்த வகையில் எங்களது அணி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் கூறியது குறிப்பிடத்தக்கது.