உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தை திறந்து வைக்கப்போறது இவரா ? – அதிரவைக்கும் தகவல்

- Advertisement -

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஆக அகமதாபாத்தில் தயாராகிவரும் “மோதிரா” மைதானத்தை பிசிசிஐ வரும் மார்ச் மாதம் திறக்க இருந்தது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் கட்டுமான பணிகள் முழுமை அடைய ஏற்பட்ட கால தாமதம் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் அந்த மைதானத்தை திறக்க முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டது.

motera

- Advertisement -

இந்த மைதானம் அகமதாபாத் மெட்ரோ பகுதியில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டமைப்பு பணிகள் ஏறக்குறைய தற்போது முடியும் தருவாயில் உள்ளதால் இந்த மாதம் இறுதியில் இந்த மைதானம் திறக்கப்படவுள்ளது. மைதானத்தில் 1,10,000 (ஒரு லட்சத்தி பத்தாயிரம்) மக்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 63 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த மைதானம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

Motera-1

அதுமட்டுமின்றி இந்தியா சுற்றுப்பயணம் வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் கையால் வரும் 24 25 தேதிகளில் இந்த மைதானம் திறந்து வைக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மைதானத்தில் ஆல் ஸ்டார்ஸ் போட்டி ஒன்றினையும் கங்குலி நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement