வீடியோ : மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நேர்ந்த பரிதாபம் – அவரே சொன்ன பின்னணியை கலாய்க்கும் ரசிகர்கள்

Arjun Tendulkar 2
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 6வது கோப்பையை வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 12 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை நெருங்கி வருகிறது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் முதல் முறையாக கடைசி இடத்தை பிடித்து வரலாற்றுத் தோல்வியை சந்தித்த மும்பை இந்த வருடமும் சுமாரான துவக்கத்தை பெற்றாலும் அதன் பின் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் அதிரடியாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தன்னுடைய கடைசி 2 போட்டியில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது மட்டுமல்லாமல் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடலாம் என்று நல்ல நிலைமைக்கு மும்பை போராடி வந்துள்ளது.

முன்னதாக பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற முதன்மை பவுலர்கள் காயத்தால் வழங்கியதால் ஒரு வழியாக இந்த சீசனில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானார். இந்தியாவுக்காக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட வேண்டும் என்ற தமது தந்தை சச்சின் டெண்டுல்கரின் ஆசைக்கிணங்க பயிற்சிகளை துவங்கி கடந்த சில வருடங்களாக நெட் பவுலராக செயல்பட்டு வந்த அவருக்கு ஜாம்பவானின் மகன் என்பதால் விரைவில் வாய்ப்பு கிடைத்து விட்டது என்ற விமர்சனங்கள் வரும் என்பதற்காகவே மும்பை நிர்வாகம் அலைகழித்தது.

- Advertisement -

பரிதாப அர்ஜுன்:
இருப்பினும் உள்ளூர் தொடரில் கோவா அணிக்காக விளையாடி முன்பை விட நல்ல அனுபவத்தை கொண்டிருந்ததால் இந்த சீசனில் அறிமுகமான அவர் புதிய பந்தில் ஸ்விங் செய்து அட்டகாசமாக செயல்பட்டார். ஆனால் 120 – 125 கி.மீ என்ற மிகவும் குறைவான வேகத்தில் பந்து வீசியதால் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்த அவர் 4 போட்டிகளுடன் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் லக்னோவுக்கு எதிராக நடைபெறும் அடுத்த முக்கியமான போட்டியில் பயிற்சிகளில் ஈடுபட்ட அவர் எதிரணியில் இருக்கும் தம்மைப் போன்ற இளம் வீரர்களை சந்தித்து பேசினார்.

அப்போது லக்னோ வீரர் யுவ்திர் சிங் “எப்படி இருக்கிறீங்க பிரதர்” என்று வழக்கமான நலம் விசாரித்தார். அப்போது தன்னுடைய பந்து வீசும் இடது கையை காண்பித்த அர்ஜுன் டெண்டுல்கர் நேற்று முன்தினம் தம்மை நாய் கடித்து விட்டதாக பரிதாபமாக கூறிக் கொண்டே மற்றொரு வீரரிடம் பேசுவதற்காக சென்றார். லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் அவ்வாறு கூறியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக மும்பை அணி கட்டுப்பாட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் அவரை எப்படி நாய் கடித்திருக்கும் என்று ரசிகர்கள் பேசுகின்றனர். இருப்பினும் பொதுவாக சில வீரர்களும் அணி நிர்வாகிகளும் செல்லப்பிராணி நாய்களை வளர்ப்பது வழக்கமாகும். மேலும் மைதானத்திலும் பாதுகாப்புக்காக நாய்கள் எப்போதுமே இருக்கும். அதில் ஏதோ ஒன்றுடன் ஏடாகூடமாக விளையாடிய போது அவ்வாறு அர்ஜுனை கடித்திருக்கலாம். மொத்தத்தில் இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் வழக்கம் போல சமூக வலைதளங்களில் கலாய்த்தும் வருகின்றனர்.

முன்னதாக ஸ்பின்னர்களே 120 கி.மீ வேகத்தில் வீசும் நிலையில் நிலையில் வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் இவ்வளவு மெதுவாக வீசுவதால் நிச்சயமாக ஒருநாள் அடி வாங்குவார் என்று முதல் போட்டியில் பார்த்த போதே ரசிகர்கள் எச்சரித்திருந்தனர். மேலும் ஆக்சன், லேண்டிங் என அடிப்படையில் எதுவுமே சரியாக பெற்றிருக்காத அர்ஜுன் விரைவில் வேகத்தை சேர்க்காவிடில் நீண்ட நாட்கள் நிலைத்து விளையாட முடியாது என்று ரசித் லதீப் போன்ற சில முன்னாள் வீரர்களும் எச்சரித்திருந்தனர்.

இதையும் படிங்க:IPL 2023 : சச்சினின் சாதனையையே முறியடித்த சுப்மன் கில். இதுதெரியுமா உங்களுக்கு? – விவரம் இதோ

அப்படி சொன்னது போலவே பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் அடி வாங்கிய அவர் மீண்டும் இத்தொடரில் வாய்ப்பு பெறுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. எனவே நல்ல லைன், லென்த் ஆகியவற்றைக் கொண்டுள்ள அவர் வேகத்தை அதிகப்படுத்தி அடுத்த சீசனில் சிறப்பாக செயல்படுவதற்கு பயிற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement