பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு வந்துவிடுவாரா? ரிஷப் பண்ட் எப்போது களத்திற்கு வருவார் – டாக்டரின் முதற்கட்ட ரிப்போர்ட் இதோ

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டிசம்பர் 30ஆம் தேதியன்று கார் விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகளை பெற்று வருகிறார். கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த அவர் அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சேர்க்கப்படாத நிலையில் ஏற்கனவே சந்தித்திருந்த லேசான காயத்திலிருந்து முழுமையாக குணமடைய ஜனவரி 3 – 15 வரை பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்வார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு முன்பாக டேராடூனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர் புத்தாண்டுக்காக வீடு திரும்பிய போது இந்த மோசமான விபத்தை சந்தித்துள்ளார்.

குறிப்பாக அதிகாலை 5.30 மணிக்கே வீட்டுக்கு கிளம்பிய அவர் களத்தில் அதிரடியாக ரன் குவிப்பதை போலவே தன்னுடைய பிஎம்டபிள்யூ காரில் சற்று அதிவேகமாக சென்றுள்ளார். அந்த சமயம் பார்த்து தூக்க கலக்கத்தை சந்தித்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த டிவைடரில் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது சாதுரியமாக செயல்பட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு காயத்துடன் வெளியே வந்த அவரை அந்த வழியாக வந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை அறிந்து அதிர்ச்சடைந்த ரசிகர்களும் முன்னாள் இந்நாள் வீரர்களும் விரைவில் குணமடைய வேண்டுமென கடவுளை பிரார்த்தனை செய்தனர்.

- Advertisement -

எப்போது வருவார்:
அவர்களது அன்பு கலந்த பிரார்த்தனைக்கு இணங்க தீவிர சிகிச்சைகளை பெற்ற ரிசப் பண்ட் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாகவும் எலும்பு முறிவு போன்ற பெரிய காயங்களை சந்திக்கவில்லை என்றும் செய்திகள் வெளியானது. அதனால் ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்தாலும் அதிகப்படியான மேற்புற காயங்களை சந்தித்துள்ள அவருக்கு முகத்தில் சந்தித்த காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் இந்த காயங்களிலிருந்து முழுமையாக குணமடைய குறைந்தபட்சம் 3 – 6 மாதங்கள் தேவைப்படும் என்று அவரை கண்காணித்து வரும் எய்ம்ஸ் மருத்துவர் ரிஷிகேஷ் கூறியுள்ளார். இது பற்றி மருத்துவ நிர்வாகம் சார்பில் அவர் பேசியது பின்வருமாறு. “தசைநார் காயத்திலிருந்து ரிஷப் பண்ட் மீள்வதற்கு குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் ஆகும். அது கடுமையானதாக இருந்தால் குணமடைய இன்னும் அதிக காலம் எடுக்கலாம். அவருடைய விரிவான காயத்தின் அறிக்கையின் அடிப்படையில் தான் அவர் குணமடையும் காலத்தை மேலும் மதிப்பீடு செய்ய முடியும்” என்று கூறினார்.

- Advertisement -

முன்னதாக களத்தில் சாதாரணமாக முதுகுப் பகுதியில் காயத்தை சந்தித்த ஜஸ்ப்ரித் பும்ரா குணமடைவதற்கு 6 மாதங்கள் தேவைப்படும் என்பதை அனைவரும் அறிவோம். அந்த நிலையில் இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கி அதிலிருந்து அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்று வரும் ரிசப் பண்ட் மருத்துவரின் முதல் கட்டளை அறிக்கைப்படி குறைந்தது 6 மாதங்கள் களமிறங்கி விளையாட முடியாது என்பது தெரிய வருகிறது. மேலும் குணமடைவதற்கே 6 மாதங்கள் தேவைப்படும் என்றால் அதன் பின் பயிற்சிகளை துவங்கி முழுமையான உடல் தகுதியை எட்டி முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய பின்பு தான் அவரால் இந்தியாவுக்காக விளையாட முடியும்.

அந்த வகையில் ரிஷப் பண்ட் மீண்டும் விளையாடுவதற்கு 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட உள்ளது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி உலகத்தரம் வாய்ந்த வீரராக தன்னை நிரூபித்துள்ள அவர் வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க2022ஆம் ஆண்டில் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவுக்கு கிடைத்த 5 வருங்கால நம்பிக்கை நட்சத்திர வீரர்கள்

அதே போல் 2023 ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறும் பட்சத்தில் அதிலும் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கிடையே ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக கேப்டனாக அவர் விளையாட மாட்டார் என்று 99% எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் அவர் விளையாடுவது 90% சந்தேகமாகியுள்ளது.

Advertisement