- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கடுமையான வயிற்று வலியால் கணிசமான உடல் எடை குறைந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – மருத்துவர்கள் குடுத்த அட்வைஸ்

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசியாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார். அதன்பிறகு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறாத அவர் இந்த இடைப்பட்ட நாட்களில் சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாட முடிவு செய்தார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிவுரை வழங்கிய மருத்துவர்கள் :

அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதத்தையும் பதிவு செய்திருந்தார். இவ்வேளையில் கடைசியாக நடைபெற்ற போட்டியின் போது விளையாடிய அவர் அந்த போட்டி முடிந்த பின்னர் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- Advertisement -

புனே நகரில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரின் போட்டிக்கு பிறகு அவர் அங்குள்ள மருத்துவமனையில் கடுமையான வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட வேளையில் அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்கையில் ஹோட்டலில் சாப்பிட்ட உணவு அவருக்கு சேராததால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதன் காரணமாக அவர் சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் மருத்துவமனையில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அப்படி மருத்துவமனையில் இருந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டு நாட்களில் நான்கு கிலோ வரை உடல் எடை குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அவரின் உடற்தகுதியை மேலும் பரிசோதித்த மருத்துவர்கள் தற்போதைக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எவ்வித பயிற்சிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் அடுத்த 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை தீவிர ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லின் பேட்டிங்கில் உள்ள வீக்னஸ் இதுதான்.. முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் – அளித்த பேட்டி

அப்படி முழு ஓய்வில் இருந்தால் தான் இழந்த உடல் எடையை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது 10 நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளை அவர் தவறவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -