சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் வலுவான நிலையில் இருக்கும் வேளையில் இன்று கடைசி டி20 போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
சுப்மன் கில்லின் வீக்னஸ் இதுதான் : சஞ்சய் பாங்கர்
இந்த தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்தாலும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் ஃபார்ம் பலரது மத்தியிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வரும் அவர்கள் இருவரும் இந்த ஆண்டில் ஒரு அரைசதம் கூட டி20 போட்டிகளில் அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதிலும் குறிப்பாக துணை கேப்டன் சுப்மன் கில்லின் ஆட்டம் பலராலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் துவக்க வீரராக நன்றாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனை நீக்கி விட்டு அந்த இடத்திற்கு வந்த சுப்மன் கில் கடைசியாக தான் விளையாடிய 15 டி20 இன்னிங்ஸ்களில் 137 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 291 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
சிறப்பான ஃபார்மில் அடுத்தடுத்த சதங்களை விளாசிய சஞ்சு சாம்சன் இருக்கும்போது இப்படி தொடர்ச்சியாக சொதப்பலாக விளையாடும் வீரருக்கு ஏன் வாய்ப்பு அளிக்க வேண்டும்? என்ற கண்டனங்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் தடுமாற என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் பாசிட்டிவான புட் வொர்க்குடன் விளையாடிய தாலே அவர் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டார். ஆனால் தற்போதைய சூழலில் அவருடைய கால் நகர்வுகளில் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 28 ஆட்டங்களில் ஸ்டிரைக் ரேட்டினை கணக்கில் கொண்டு தனக்கு நேராக வரும் பந்துகளையும் அடித்து விளையாட முற்பட்டு ஆட்டமிழந்து வருகிறார்.
இதையும் படிங்க : சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு இந்திய அணித்தேர்வு குறித்து வருத்தம் தெரிவித்த – இஷான் கிஷன்
தனக்கு நேராக வரும் பந்துகளுக்கு எதிராக அவருடைய கால் நகர்வுகள் சரியாக இல்லாததே அவருடைய வீக்னஸ்ஸாக நான் பார்க்கிறேன். எனவே அவர் ஃபுட் வொர்க்கில் கவனம் செலுத்தி அதில் உள்ள குறைகளை கலைந்தால் மட்டுமே அவரால் மீண்டும் பார்முக்கு திரும்ப முடியும். ஸ்ட்ரைக் ரேட்டை அதிகமாக வைக்க வேண்டும் என்று விரும்பி அவர் விளையாடி வருவதாலும் சில சிக்கலை அவர் சந்தித்திருக்கிறார் என்று சஞ்சய் பாங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



