இந்தியாவில் நடைபெற்று வந்த பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரானது நேற்று டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட் அணியும், அங்கீத் குமார் தலைமையிலான ஹரியானா அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ஹரியானா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்திய அணியில் நான் இல்லாதது வருத்தம் : இஷான் கிஷன்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஜார்கண்ட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. பின்னர் 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஹரியானா 193 ரன்களை மட்டுமே அடித்து சுருண்டதால் ஜார்கண்ட் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்ததோடு முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரின் சாம்பியன் பட்டத்தையும் அசத்தியது.
இந்த போட்டியின் போது ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் 49 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் என 101 ரன்கள் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியோடு ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய பின்னர் தற்போது மீண்டும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் அவரை மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இறுதி போட்டி முடிந்த பின்னர் இந்திய அணியிலிருந்து தான் புறக்கணிப்பட்டது குறித்தும் அணித்தேர்வு குறித்தும் வெளிப்படையாக சில வருத்தங்களை இஷான் கிஷன் பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போதும் இந்திய அணியில் என் பெயர் இல்லாதது மிகுந்த வேதனை அளித்தது. அப்போதுதான் நான் ஒரு விடயத்தை புரிந்து கொண்டேன். இந்த ஆட்டம் போதாது போல இன்னும் நாம் சிறப்பாக ஆட வேண்டும் என்று முடிவு செய்து தற்போது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கெதிரான 5 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
எப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டாலும் அதில் என் பெயர் இடம் பெறவில்லை என்றால் வருத்தம் தான் இருக்கும். ஆனால் அந்த வருத்தத்தையும் தாண்டி எனது வேலையை நான் தொடர்ந்து சிறப்பாக சிறப்பாக செய்து வருகிறேன். கேப்டனாக சையத் முஷ்டாக் அலி தொடரை வென்றது என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்றும் இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.



