- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரு வாரத்திற்கு அந்த மியூசிக் டைரக்டர் வாழ்க்கையை நான் வாழனும் – தினேஷ் கார்த்திக் அளித்த சுவாரசிய கருத்து

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடிய வரும் அவர் 257 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த அவர் அதற்கு அடுத்து சில வாரங்களிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு அறிவித்திருந்தாலும் தொடர்ந்து வர்ணனையாளராகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட இருக்கிறார். அதேபோன்று தென்னாபிரிக்காவில் நடைபெற இருக்கும் எஸ்ஏ டி20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இப்படி கிரிக்கெட் தொடர்பான பணிகளிலேயே பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது கிரிக்கெட் சம்பந்தமான பேட்டிகளில் கலந்துகொண்டு அதற்கு தனக்கு பதிலையும் அளித்து வருகிறார். அந்த வகையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தினேஷ் கார்த்திக்கிடம் ஒரு வாரத்திற்கு எந்த பிரபலம் போல் நீங்கள் வாழ விருப்பப்படுகிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ஒரு வாரத்திற்கு என்றால் ஏ.ஆர் ரஹ்மான் போன்று வாழ ஆசைப்படுகிறேன். அவரது தீவிர ரசிகர்கள் நானும் ஒருவன். அவரை இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது. இசையில் அவர் ஒரு ஜீனியஸ் என்று அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க : ஆஸி தொடருக்கு 120% அவசியம்.. வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு.. அவருக்கு பதிலாக அறிமுகமாகும் 2 வீரர்கள்

30 ஆண்டுகளாக எப்படி தொடர்ச்சியாக புதுமையான இசையமைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அவர் மூளைக்குள் சென்று அவர் எப்படி யோசிக்கிறார் என்பதையும் நான் தெரிந்து கொள்ள விரும்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -