1000 கிலோமீட்டர் பயணித்து போட்டியை பாக்க வந்துருக்கோம் – ரசிகர்களின் அன்புக்கு மரியாதை அளித்த தினேஷ் கார்த்திக்

Karthik
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 27-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டு பிளேசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த பெங்களூரு அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் விளையாடியது. ஆனால் பின் வரிசையில் களமிறங்கிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருமுறை பெங்களூரு அணியை காப்பாற்றி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Dinesh Karthi 66

- Advertisement -

இந்த போட்டியில் அதிரடியால் ரசிகர்களை மகிழ விட்ட கார்த்திக் பவுலருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தினார் என்றே கூறலாம். ஏனெனில் 34 பந்துகளை சந்தித்த அவர் 194.1 ஸ்டிரைக் ரேட்டில் 66 ரன்களை குவித்து போட்டியை அப்படியே தலைகீழாக திருப்பினார் என்றே கூறலாம். ஏனெனில் ஒரு கட்டத்தில் பெங்களூரு அணி 140-150 ரன்களில் முடிந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி காரணமாக பெங்களூரு அணி 189 ரன்கள் என்ற பிரம்மாண்ட ரன் குவிப்பிற்கு சென்றது.

பின்னர் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணியானது 173 ரன்களை மட்டுமே சேர்க்க 16 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு முறை பெங்களூர் அணி அருமையான வெற்றியை ருசித்தது. இந்நிலையில் இந்த போட்டியை காண வந்த ரசிகை ஒருவர் காண்பித்த பதாகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அந்த பெண் ரசிகைகள் கையில் ஏந்திய ஒரு பதாகையில் :

karthik 1

நாங்கள் இந்த போட்டியை காண ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து இங்கு வந்துள்ளோம். ஆர்சிபி அணி விளையாடும் இந்த போட்டியை காணவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிச்சயம் இம்முறை ஐபிஎல் கப்பை நமதே என்று அந்தப் பதாகையில் எழுதி இருந்தது. இந்த குறிப்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகவே அதற்கு தினேஷ் கார்த்திக்கும் தற்போது அவரது டுவிட்டர் வாயிலாக பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

அதில் நிச்சயம் உங்களது இந்த பயணம் மதிப்புமிக்க ஒன்றுதான். இம்முறை கோப்பை நமக்கே என்பது போல தினேஷ் கார்த்திக்கும் அதற்கு பதில் அளித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கின் இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தொடர்ச்சியாக 6 தோல்விகள். கேப்டனாக ரோஹித் யாரை குற்றம் சொல்லியிருக்காரு பாருங்க – விவரம் இதோ

மேலும் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணியாக இருந்தாலும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணியானது இம்முறையாவது ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே ஆர்.சி.பி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement