- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை : பயிற்சி போட்டிகளில் சொதப்பிய முக்கிய 2 வீரர்கள் – சிக்கலில் இந்திய அணி

ஆஸ்திரேலியாவில் நாளை மறுதினம் துவங்க உள்ள டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய அணி குறித்தும், அணியில் உள்ள வீரர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் சமூகவலைதளத்தில் உலா வருகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா, தீபக் சாகர் ஆகிய முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

அவர்களை தவிர்த்து மீதம் உள்ள வீரர்கள் தற்போது ஆஸ்திரேலியா சென்று அங்கு உள்ளூர் அணிகளுக்கு எதிராக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடும் 7-8 வீரர்கள் ஆஸ்திரேலியா மைதானங்களில் இதுவரை விளையாடியதில்லை என்பதற்காக அவர்களுக்கு முன்கூட்டியே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் அவர்களுக்கு சரியான பயிற்சியை வழங்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விடயத்தை முடிவு செய்த இந்திய அணி விரைவாகவே ஆஸ்திரேலியா சென்று தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பயிற்சி போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தற்போது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஏற்கனவே இந்த இரண்டு வீரர்களுக்கும் இடையே பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க கடும் போட்டி இருந்து வரும் வேளையில் இருவரும் இந்த பயிற்சி போட்டியில் அவர்களது இடத்தினை உறுதி செய்வதற்காக சோதிக்கப்பட்டனர்.

- Advertisement -

வழக்கமாக ரிஷப் பண்டை விட தினேஷ் கார்த்திக்-க்கு அதிகமாக வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இந்த பயிற்சி போட்டிகளில் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். அதோடு டாப் ஆர்டரில் களம் இறங்கிய ரிஷப் பண்டும் ரன்குவிக்க தடுமாறி வருவதால் இவர்கள் இருவரில் யாரை பிளேயிங் லெவனில் இறக்க வேண்டும் என்ற குழப்பம் தற்போது ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு அவங்க 3 பேரை எடுத்தது டூ மச். உம்ரான் மாலிக்கை எடுத்திருக்கனும் – பாரத் அருண் பேட்டி

எது எப்படி இருப்பினும் அனுபவத்தின் அடிப்படையிலும், பினிஷர் ரோலிலும் தினேஷ் கார்த்திக் இறங்குவார் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனாலும் அவர் இதே போன்று மோசமாக விளையாடினால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டாப் ஆர்டரில் விளையாடவும் வாய்ப்புள்ளது. இதனால் தினேஷ் கார்த்திக் தனது இடத்தை இழக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by