இந்திய அணிக்கு அவங்க 3 பேரை எடுத்தது டூ மச். உம்ரான் மாலிக்கை எடுத்திருக்கனும் – பாரத் அருண் பேட்டி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த டி20 தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது.

INDIA Dinesh Karthik Chahal Arshdeep Singh Harshal Patel Bhuvaneswar Kumar Rohit Sharma

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரை வெல்ல வாய்ப்புள்ள ஒரு அணியாக பார்க்கப்படும் இந்திய அணி குறித்து தற்போது பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் இந்திய அணி குறித்து கூறுகையில் :

இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட ஸ்பின்னர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இத்தனை ஸ்பின்னர்கள் அணியில் இருப்பது அதிகமான ஒன்றுதான். அஷ்வின், அக்சர்பட்டேல், சாஹல் ஆகிய மூன்று ஸ்பின்னர்கள் நம் அணியில் உள்ளனர்.

Umran Malik

அது தவிர்த்து தீபக் ஹூடாவும் பகுதிநேர சுழற்பந்து வீசும் திறமை படைத்தவர். இப்படி அணியை தேர்வு செய்திருக்கக் கூடாது. இந்திய அணியில் நிச்சயம் உம்ரான் மாலிக் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவரிடம் அபரவிதமான வேகம் உள்ளது. ஆஸ்திரேலிய மைதானங்களில் அவரைப் போன்ற நல்ல வேகம் உள்ள பவுலர்களுக்கு நல்ல ஹெல்ப் கிடைக்கும்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்துவீசிய அவர் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அற்புதமாக வீசுவார் என்பதே என்னுடைய கருத்து. என்னை பொருத்தவரை இத்தனை ஸ்பின்னர்களை எடுத்ததை தவிர்த்து உம்ரான் மாலிக்கை அணியில் சேர்த்திருக்கலாம் என்று பாரத் அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த டாப் 8 பவுலர்களின் பட்டியல்

ஏற்கனவே இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement