அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போதே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலமானது நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ நடைபெறும் என்று தெரிகிறது. இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள், எந்தெந்த அணிக்கு தேர்வு செய்யப்பட போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
தோனி ஒருவருக்காகத்தான் இந்த ரூல்ஸ் :
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் 120 கோடி வரை ஏலத்தில் ஒவ்வொரு அணியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன் கேப்டு பிளேயர் விதிமுறையை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளது.
அதாவது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள வீரர்களை அன் கேப்டு பிளேயராக தக்க வைக்கலாம் என்றும் பி.சி.சி.ஐ பழைய விதிமுறையை மீண்டும் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த அன் கேப்டு பிளேயர் விதிமுறையை தோனி ஒருவருக்காக தான் பி.சி.சி.ஐ கொண்டு வந்துள்ளதாக தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : அன் கேப்டு பிளேயர் விதிமுறை ஒரு மனிதனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. இதை நான் உறுதியாக கூறுவேன். ஏனெனில் ஐபிஎல் தொடரில் தோனி எவ்வளவு முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது நமக்கு தெரியும். கடந்த 15-18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரானது ரசிகர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கு தோனியும் ஒரு மிக முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அவர் விளையாடும் போட்டிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்துகிறது. அதோடு சென்னை அணியின் ஒரு பெரிய புள்ளியாகவும் அவர் செயல்பட்டு வருகிறார். எந்த டிவி ஒளிபரப்பாளரிடம் கேட்டாலும் இந்த மனிதர் களத்தில் இறங்கும் போது ரேட்டிங் உயரும் என்ற பதில் தான் உங்களுக்கு கிடைக்கும். தோனி என்பவர் ஐபிஎல் தொடரில் இதயம் போன்றவர் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : பிட்ச் எப்படி இருந்தாலும் அசத்தும் அவர் தான் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த இந்திய வீரர்.. ஆர்பி சிங் பாராட்டு
அதேபோன்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : உலகத்தின் நான்காவது பணக்கார லீக்காக ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. இதில் தோனி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். தோனி விளையாடுவது சிஎஸ்கே அணிக்காக மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்குமே ஒரு ஸ்டாண்டிங் பாயிண்ட் போன்றது என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.