முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து தமிழில் ட்வீட் செய்த பிராவோ. உருக்கமான வேண்டுகோள் – விவரம் இதோ

Bravo
- Advertisement -

சென்னை சிஎஸ்கே அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக பல ஆண்டுகாலம் சென்னை அணிக்காக விளையாடி வருபவர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் நாட்டை தாண்டி தனது இரண்டாவது தாய்வீடு சென்னைதான் என்று கூறும் அளவிற்கு தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் பிராவோ தற்போது தமிழக மக்களுக்காக உருக்கமான வேண்டுகோள் ஒன்றினை வைத்துள்ளார்.

bravo

- Advertisement -

அதன்படி தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எண்ணி தான் வருந்துவதாகவும் இதையொட்டி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள தனது ட்விட்டர் கருத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்து அந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதிலிருந்து விரைவில் மீள மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பின்பற்றுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். அரசு அறிவித்துள்ள நெறி முறைப்படி வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே வந்தால் மாஸ்க் அணியுங்கள் குறிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

இவைதான் கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி நம்மால் நமது குடும்பத்தினர் பாதிக்கக்கூடாது. அனைவரும் சாம்பியன்கள் விரைவில் கொரோனாவில் இருந்து மீள்வீர்கள் என அவர் உருக்கமுடன் தமிழக வீரர்களுக்கு வேண்டுகோள் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement