கங்குலி அணியில் விளையாடிய கடைசி வீரரும் இன்று ஓய்வு அறிவிப்பு. ரசிகர்கள் அதிர்ச்சி

Mongia
- Advertisement -

கங்குலி தலைமையிலான இந்திய அணி கடந்த 2003ம் ஆண்டு உலக கோப்பை இறுதி வரை சென்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது. அந்த அணியில் இந்திய அணிக்காக ஆல்-ரவுண்டராக விளையாடியவர் தினேஷ் மோங்கியா. அவர் தற்போது இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

Mongia 1

- Advertisement -

அவர் கடைசியாக 2007-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக முதல்தர போட்டியில் விளையாடினார். அதன்பிறகு ஐசிஎல் போட்டிகளில் விளையாடி அவர் பிசிசிஐ-யால் தடை செய்யப்பட்டார். அதன் பிறகு எந்த வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2001ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பிடித்த தினேஷ் மோங்கியா 1995 ஆம் ஆண்டு முதல் முதல் தர போட்டிகளில் விளையாடி வந்தார்.

தினேஷ் மோங்கியா இந்திய அணிக்காக 2001ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பிறகு தனது முதல் சதத்தை 2002ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடித்தார். அதன் பிறகு இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1230 ரன்களை குவித்துள்ளார். அவர் கடைசியாக 2007-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

Mongia 2

அதன்பிறகு தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கங்குலி உருவாக்கிய அணியில் கடைசியாக மீதமிருந்த இவரும் ஓய்வு அடைந்ததால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement