டி.கே இருந்தும் முக்கிய நேரத்தில் கழற்றி விட்டாங்க – உ.கோ தோல்வி காரணத்தை உடைக்கும் முன்னாள் வீரர்

Dinesh-Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திர்லர் திருப்பங்களுடன் நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. இந்த தொடரில் ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 2022 ஐபிஎல் தொடரில் கடினமாக உழைத்து 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்து சிறப்பாக செயல்பட்டதால் முதன்மை விக்கெட் கீப்பராகவும் பினிஷராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே கடைசி ஓவரில் விராட் கோலி போராடிக் கொண்டு வந்த வெற்றியை கோட்டை விடும் வகையில் சொதப்பிய அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி வங்கதேசத்துக்கு எதிராக ரன் அவுட்டாகி எந்த போட்டியிலுமே ஃபினிஷிங் செய்யாமல் சுமாராக செயல்பட்டார். அது போக விக்கெட் கீப்பிங்கிலும் சுமாராகவே செயல்பட்டு அழுத்தமான போட்டிகளில் சொதப்புவேன் என்பதை மீண்டும் நிரூபித்த அவர் போராடிப் பெற்ற இந்த பொன்னான வாய்ப்பில் எந்த போட்டியிலும் 20 ரன்களை கூட தாண்டாமல் செயல்பட்டது தமிழக ரசிகர்களையே ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

தப்பு பண்ணிட்டாங்க:

அதனால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் மீண்டும் தேர்வு செய்யப்பட் ரிஷப் பண்ட் வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியிலும் சுமாராகவே செயல்பட்டது வேறு கதை. ஆனால் பினிஷிங் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் வீரராக திகழும் தினேஷ் கார்த்திக்க்கை கடைசி நேரத்தில் நம்பாமல் கழற்றி விட்டதே அரையிறுதியில் எக்ஸ்ட்ரா ரன்களை எடுக்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்ததாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் தினேஷ் கார்த்திக்கை வைத்துக் கொண்டே அவர் பேசியது பின்வருமாறு.

“உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தேவையான வீரர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு கடைசி வரை வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வகையில் தினேஷ் கார்த்திக் பினிஷிங் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் செமி ஃபைனல் வரும் நேரத்தில் அவருக்கு விளையாடும் 11 பேர் கிரிக்கெட் அணியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறினார். அப்போது பதிலளித்த தினேஷ் கார்த்திக் பினிஷிங் என்பது பெரிய ரன்களை குவிக்கும் வேலை கிடையாது என்பதையும் கடைசி நேரத்தில் முக்கிய ரன்களை எடுக்கும் வேலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் போலவே டி20 ஸ்பெசலிஸ்ட் என்பவர்கள் அந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தேவையானவர்கள். அந்த கலாச்சாரத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கு தன்னை உட்படுத்திக் கொண்டதாக நினைக்கிறேன். மேலும் நாம் ஐசிசி தொடர்களில் கிடைக்கும் முடிவுகளை வைத்து வீரர்களை மதிப்பிடுகிறோம் என்று நினைக்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்பும் நாம் ஐசிசி தொடர்களில் வெற்றிகளை காணவில்லை. மேலும் ஐபிஎல் போன்ற உயர்ந்த தொடரில் நிறைய பேர் வந்து தங்களுடைய செயல்பாடுகளை வெளிப்படுத்தி அணிக்குள் வருகிறார்கள்”

“அந்த வகையில் ரோகித் சர்மாவிடம் எப்போதுமே நல்ல தெளிவு உள்ளதை நான் கண்டேன். அனேகமாக அவர் என்னை அவரது அணியில் விளையாட வைப்பதில் உறுதியாக இருந்தார் என்று நினைக்கிறேன். என்னை பொறுத்த வரை அது தான் வயதில் முதிர்ந்த கேப்டனிடம் இருக்க வேண்டிய சிறந்த அம்சமாகும்” என்று கூறினார். இருப்பினும் அரையிறுதியில் இந்தியா தோல்வியடைவதற்கு மோசமான பந்து வீச்சு மற்றும் ஓப்பனிங் பேட்டிங் மட்டுமே முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க : எல்லா திறமையும் இருந்தும் இந்திய அணி அவரை ஏன் செலக்ட் பண்ண மாட்றாங்க – முகமது கைப் ஆதங்கம்

ஏனெனில் இந்தியா நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து வெறும் 16 ஓவரில் அடித்து நொறுக்கியது. அது போக உலகக்கோப்பை போன்ற தொடர்களில் கொடுக்கப்படும் ஒருசில போட்டியிலேயே கச்சிதமாக செயல்பட்டாக வேண்டும். அதில் போய் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்று பேசுவது சரியாக இருக்காது. ஏனெனில் அதற்குள் உலகக் கோப்பையே முடிந்து விடும்.

Advertisement