எல்லா திறமையும் இருந்தும் இந்திய அணி அவரை ஏன் செலக்ட் பண்ண மாட்றாங்க – முகமது கைப் ஆதங்கம்

Mohammad-Kaif
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தற்போது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி இன்று வெலிங்டன் நகரில் நடைபெற இருந்த வேளையில் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த போட்டியானது கைவிடப்பட்டது.

INDvsNZ

இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல், பும்ரா என மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் எதிர்கால இந்திய டி20 கிரிக்கெட் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய அணியில் எப்பொழுதுமே, எந்த சூழ்நிலையிலும் விளையாட ஒரு வீரர் தயாராக இருக்கிறார். ஆனாலும் அவரை இன்னும் டி20 உலக கோப்பைக்கான அணியில் இந்திய நிர்வாகம் தேர்வு செய்ய மறுக்கிறது அந்த வீரர் சஞ்சு சாம்சன் தான். நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் ஐந்தாவது இடத்தில் விளையாட சஞ்சு சாம்சன் விளையாட தயாராக இருந்தார். பல ஆண்டு காலமாக ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியும் வருகிறார்.

Sanju Samson

ஆனால் அவரை இந்த முறையையும் இந்திய அணி தேர்வு செய்யாதது வருத்தம் அளிக்கிறது. சாம்சன் மேற்கிந்திய தீவுகளில் மிகச் சிறந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமின்றி இரண்டு மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் அவர் உள்ளே வந்து அதிரடியாக விளையாடுகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் என அனைவரது பந்துகளிலும் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கும் திறமையுள்ள அவரை அணியின் நிர்வாகம் நிராகரிக்கிறது.

- Advertisement -

என்னை பொறுத்தவரை அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம்பெற்றிருக்க தகுதியான ஒரு வீரர் தான். எனவே அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான அணியில் அவரை தேர்வு செய்யவில்லை என்றால் அது நிச்சயம் தவறு என்று முகமது கைப் வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர் இதுவரை 16 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : எதுக்கு செலக்ட் பண்ணீங்க? சஞ்சு சாம்சன் வேஸ்ட் தான் – ஒருதலைபட்சமாக ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம் என்ன

என்னை பொறுத்தவரை அவர் தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம் பெற்றால் நிச்சயம் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார். அதோடு அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்கான அணியில் நான் அவரை பார்க்க வேண்டும் என ஆதங்கத்துடன் முகமது கைப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement