IND vs NZ : எதுக்கு செலக்ட் பண்ணீங்க? சஞ்சு சாம்சன் வேஸ்ட் தான் – ஒருதலைபட்சமாக ஆகாஷ் சோப்ரா சொல்லும் காரணம் என்ன

Sanju Samson Aakasch Chopra
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பையில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறிய இந்தியா அடுத்ததாக அருகில் இருக்கும் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்கள் விளையாடுகின்றனர். குறிப்பாக காலம் காலமாக தொடர் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக மீண்டும் இடம் பிடித்து அசத்தியுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர் கடந்த 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் 2வது போட்டியை 2019ஆம் ஆண்டு தான் விளையாடினார் என்பதே பெரிய கொடுமையாகும்.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

அதன் பின்பும் தொடர்ச்சியாக தேர்வு செய்யப்படாத அவர் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பேட்டிங்கில் அதிரடியாக ரன்களை குவித்து கேப்டனாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்றும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி தேர்வு செய்யப்பட்ட சஞ்சு சாம்சன் அயர்லாந்துக்கு எதிரான டி20 முதல் முறையாக அரை சதமடித்து சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவேன் என்பதை நிரூபித்து காட்டினார்.

வேஸ்ட் தான்:

ஆனாலும் டி20 உலக கோப்பையில் அவருக்கு ரிசர்வ் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. மறுபுறம் காலம் காலமாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டதால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் அறிவித்து பிசிசிஐ மழுப்பியது. இருப்பினும் அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து நிலையான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியுள்ள அவர் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanju Samson

ஆனால் சஞ்சு சம்சனை தேர்வு செய்துள்ள நீங்கள் இந்த தொடரில் அவருக்கு எந்த இடத்தில் வாய்ப்பு கொடுப்பீர்கள் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் சஞ்சு சம்சனை தேர்வு செய்துள்ளீர்கள் ஆனால் அவர் எந்த இடத்தில் விளையாடுவார்? ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 3 இடத்தில் விளையாடாமல் போனால் சூரியகுமார் யாதவ் நம்பர் 4 இடத்தில் விளையாடவில்லை என்றால் ஹர்திக் பாண்டியா நம்பர் 5வது இடத்தில் விளையாடவில்லை என்றால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் அவர்கள் எங்கே செல்வார்கள்? சூரியகுமார் யாதவ் 4வது இடத்திற்கு கீழே செல்லக்கூடாது”

- Advertisement -

“ஷ்ரேயஸ் ஐயர் 3வது இடத்திற்கு கீழே செல்லக்கூடாது. ஹர்திக் பாண்டியா 5வது இடத்தில் தான் விளையாட வேண்டும் என்ற நிலைமையில் சஞ்சு சம்சனுக்கு 6வது இடம் மட்டுமே கட்சிதமாக இருக்கும். ஆனால் அவர் அந்த இடத்தில் இந்தியா பயனடையும் வகையில் செயல்படுவாரா? ஏனெனில் அந்த இடத்தில் நீங்கள் தீபக் ஹூடாவை பயன்படுத்தலாம். அவர் டாப் ஆர்டரில் விளையாடும் தகுதியும் பெற்றுள்ளார். அதே போல் சுப்மன் கில் உங்களுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவாரா? ஒருவேளை அவர் டி20 அணியில் விளையாடவில்லை என்றால் பிரிதிவி ஷா விளையாடி இருக்கலாமே” என்று கூறினார்.

Aakash Chopra

இப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் என்ற பெயரில் கேள்விகளை அடுக்கும் உங்களுக்கு ஷ்ரேயஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் அதுவும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவார் என்பதும் சஞ்சு சாம்சன் அதில் வெளுத்து வாங்குவார் என்பதும் தெரியாதா என்று ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற ஒருவர் எப்படி அணியில் விளையாடுவாரோ அதே போல் தான் சஞ்சு சாம்சனும் விளையாடுவார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் இதுபோல் ஒருதலைபட்சமாக பேசுவதை நிறுத்துமாறு அவருடைய யூடியூப் பக்கத்தில் நேரடியாக கமெண்ட் செய்து பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement